Shukra Peyarchi 2023 in Tamil
அனைத்து மனிதர்களுக்கும் அனைத்துமே ஜோதிட சாஸ்திரப்படி தான் கருதப்படுகிறது. அதேபோல் ஒவ்வொருவருக்கும் காதல் வாழ்க்கை, பணம் அனைத்தையும் நிர்ணயம் செய்வது இந்த ஜோதிட சாஸ்திரம் தான். அதேபோல் கிரகங்கள் அனைத்தும் ஒவ்வொரு வீட்டிலும் அமர்வதால் மற்ற ராசிகளுக்கு ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அப்படி சுக்கிர பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு மட்டும் நல்ல மாற்றம் ஏற்படுகிறது. அது என்ன மாற்றம் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ மீனத்தில் உருவாகும் மாற்றத்தால் இந்த 3 ராசிக்கு தான் நல்ல காலம்
Shukra Peyarchi 2023 in Tamil:
மகர ராசி:
மகர ராசிக்கு நல்ல காலம் ஆகும். எதை செய்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். நிதி ரீதியாக நலன் மாற்றம் கிடைக்கும். தேவைக்கு அதிகமான பணம் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல பதவியை அடைவீர்கள். இந்த நேரம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உடல்நிலை உங்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும்.
கன்னி ராசி:
சுக்கிரன் மாற்றத்தால் வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல வாய்ப்புகள். தந்தையின் வழியில் நல்ல உதவிகள் கிடைக்கும். பணம் நிறைய சம்பாதிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. திருமணம் ஆகாதவர்கள் இந்த காலத்தில் திருமணம் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ புதனின் பார்வையால் 18 ராசிகளில் 4 ராசிகளுக்கு மட்டும் எதிர்பார்க்காத அளவிற்கு பண வரவு வரப்போகிறது
கடக ராசி:
சுக்கிரனின் திடீர் மாற்றம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலத்தில் வீடு வாங்க நினைப்பவர் வீடு வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. சிலர் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பொருளாதார ரீதியாக நலன் நிலைக்கு வருவீர்கள். ஏதேனும் போட்டிகளில் ஈடுபட்டால் அதில் வெற்றிகள் உங்கள் வீட்டை வந்து சேரும்.
ரிஷப ராசி:
ரிஷப ராசிக்கு ஏற்ற இறக்கத்துடன் பலன்கள் கிடைக்கும். நீதிமன்றம் சார்பாக வழக்கு ஏற்பட்டிருந்தால் அது உங்களுக்கு சார்பான பலன்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் காரணமாக வெளியிடங்களில் கடன் வாங்குவீர்கள். நீங்கள் புதிய வாய்ப்புகளை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. புதிய தொழில் செய்ய நினைத்தால் தற்போது அதனை தள்ளிப்போடுங்கள். பிற்காலத்தில் நல்ல காலமாக இருக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |