மார்ச் 12 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு அமோகமான அதிர்ஷ்டம் காத்து கொண்டிருக்கிறது..!

Sukra Peyarchi Palangal in Tamil

சுக்கிர பெயர்ச்சி பலன்கள் 2023

செல்வத்தின் அதிபதி சுக்கிரன் ஆவார். இவர் தற்போது வேற ராசிக்கு மாற்றம் ஆகிறார். ஆகவே ராசிகளில் பலன்கள் மாறுபடும் அல்லவா. இந்த சுக்கிரன் மார்ச் 12 ஆம் தேதி மேஷ ராசிக்கு மாறுகிறார். அதே ராசியில் ராகுவுடன் இணைகிறார். ராகுவின் மாற்றம் அசுர பலன்களை அளிப்பார். ஆகவே மார்ச் மாதம் 12 தேதியின் மேஷ ராசியில் நுழைவதால் மற்ற ராசிக்கு நல்ல பலன்களையும், சுப பலன்களையும் அளிக்கிறார். ராகு சுக்கிரன் இருவரும் சில ராசிக்கு நல்ல பலன்களை மேலும் மேலும் அளிப்பார். அது எந்த ராசி என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்துகொள்வோம்..!

மேஷ ராசி:

சுக்கிரன் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகுவதால் மேஷ ராசிக்கு மேலும் அதிர்ஷ்டத்தை அளிக்கும். உங்களின் ஆளுமையில் நேர்மை அதிகமாகும். இந்த காலத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த காலத்தில் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இந்த காலத்தில் மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும்.

மீனம் ராசி:

மீனம் ராசி

மீன ராசிக்கு சுக்கிரன் நல்ல பலன்களை அளிக்கிறார். அதுவும் பணம் சேமிக்கவும் நல்ல வழியாக இருக்கும். துணையுடன் பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது. உறவினர்களுடன் நல்ல ஆதரவுடன் இருப்பீர்கள். அதேபோல் பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவீர்கள்.

குருவின் பார்வையினால் குழந்தை பாக்கியம் பெறும் இந்த 7 ராசிகள் மட்டும் தான்..!

தனுசு ராசியில் சுக்கிரன்:

தனுசு ராசி

இந்த தனுசு ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி நன்மையை அளிக்கிறது. படிக்கும் மாணவர்களுக்கு நல்ல காலமாக உள்ளது. திருமணம் ஆனவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட காலமாக முடியாமல் இருந்த சொத்து பிரச்சனை இந்த சுக்கிரன் மாற்றம் நல்ல செய்தியை அளிக்கும். நிதி சம்பந்தப்பட்ட  பிரச்சனை எதுவும் இருக்காது. பணிகளில் பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்ம ராசி:

சிம்ம ராசி

சிம்ம ராசிக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் திருமணம் ஆகாமல் உள்ளவர்களுக்கு நலன் செய்தி வரும். தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த காலத்தில் தொடங்கலாம். புதிய வேலைகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அலைச்சல் அதிகமாக இருக்கும்.

மிதுன ராசி:

மிதுன ராசி

சுக்கிரன் மாற்றம் மிதுன ராசிக்கு நல்ல பலனை அளிக்கும். வெளி மக்களுடன் பழகும் வாய்ப்பு உள்ளது. உங்கள் குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு நலன் வாய்ப்பு உள்ளது. அதனை சரியாக பயன்படுத்த வேண்டும் மேலும் படிப்பில் கவனம் தேவை.

செவ்வாய் பெயர்ச்சியால் இந்த 4 ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது..! உங்கள் ராசி இதில் இருக்கா..?

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்