சுற்றுலா செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்

sutrula selvathu pol kanavu vanthal

விமானத்தில் வெளிநாடு செல்வது போல் கனவு கண்டால்

பொதுவாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது தோன்றுவது தான் கனவு. இந்த கனவு எல்லாருக்கும் ஒரே மாதிரியாக தோன்றுவதில்லை. சில நபர்களுக்கு விடியற்காலையில் தோன்றும். சில நபர்களுக்கு நடு இரவில் கனவு தோன்றும். சில கனவுகள் நினைவில் இருக்கும், சில கனவுகள் நினைவில் இருக்காது. ஆனால் நாம் காண்கின்ற ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு மாதிரியான பலன்கள் இருக்கிறது. ஆன்மிகத்தில் நாம் காண்கின்ற கனவு எதிர்காலத்தில் நடக்க கூடியதை முன்னதாகவே உணர்த்துகிறது.

சுற்றுலா செல்வது போல் கனவு கண்டால்:

விமானத்தில் வெளிநாடு செல்வது போல் கனவு கண்டால்

 சுற்றுலா செல்வது போல் கனவு கண்டால் உங்களின் நண்பர்களுடன் கவனமாக பழக வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. மேலும் உங்களின் எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளும் நபரிடம் கவனமாக பேச வேண்டும். எந்த விஷயத்தை அவரிடம் சொல்ல வேண்டும் என்றும் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் யார் மீது அதிக நம்பிக்கை வைத்துளீர்களோ அவர்கள் உங்களுக்கு துரோகம் செய்ய போகிறார் என்பதையும் உணர்த்துகிறது.  

நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன்

சுற்றுலா சென்ற இடத்தில் சாப்பிடுவது போல் கனவு கண்டால்:

சுற்றுலா சென்ற இடத்தில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும் என்பதையும் உணர்த்துகிறது. நீங்கள் வேலை வேலை என்று இல்லாமல் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

நண்பர்களுடன் பயணம் செய்வது போல் கனவு கண்டால்:

நண்பர்களுடன் பயணம் செய்வது போல் கனவு கண்டால் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பதை குறிக்கிறது. அதுவே தெரியாத இடத்திற்கு பயணம் செய்வது போல கனவு கண்டால்  நீங்கள் எதிர்ப்பார்க்காத நன்மைகள் வாழ்க்கையில் நடக்கும். உங்களின் வாழ்க்கையில் மாற்றத்தை காண்பீர்கள்.

உணவு பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்