சித்திரை புத்தாண்டில் எந்த நிறத்தில் ஆடை அணிய வேண்டும்..?

Advertisement

சித்திரை புத்தாண்டு 2024 ஆடை நிறம்

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தமிழ் புத்தாண்டு அன்று எந்த நிறத்தில் ஆடை அணிய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க. பொதுவாக, ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு. அதன்படி பார்த்தால், வருகின்ற குரோதி வருட தமிழ் புத்தாண்டு அன்று என்ன நிறத்தில் ஆடை அணிந்தால் நல்லது என்பதை இப்பதிவில் விவரித்துள்ளோம்.

புத்தாண்டு அன்று நாம் என்ன செய்கிறமோ அது தான் அன்றைய வருடம் முழுவதும் நமக்கு நடக்கும். இதனால், மற்ற நாட்களில் எப்படி இருக்கின்றோமோ இல்லையோ ஆனால், புது வருடம் பிறக்கும் அன்று நாம் பல நல்ல செயல்களை செய்ய வேண்டும். ஆன்மீக ஈடுபாடுகளை கொண்டிருக்க வேண்டும். தானம் செய்ய வேண்டும். இதுபோன்ற பலவற்றை செய்ய வேண்டும். அதேபோல், அன்றைய தினத்தில் அந்த வருடத்திற்கு உகந்த நிறஆடையை அணிய வேண்டும். அதனை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது எப்படி.?

Tamil New Year 2024 Dress Colour:

இந்த ஆண்டு 2024 குரோதி வருட புத்தாண்டு அன்று வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறத்தில் உள்ள ஆடை அல்லது வெள்ளை நிறம் கலந்துள்ள ஆடையினை இந்த தமிழ் புத்தாண்டில் அணியலாம். வெள்ளை நிறம் பிரகாசமாகவும் சமாதானத்தை குறிப்பதாகவும் இருப்பதால் இந்த குரோதி வருட புத்தாண்டில் வெள்ளை நிற ஆடையை அணிவது நன்மை பயக்கும்.

சித்திரை புத்தாண்டு 2024 ஆடை நிறம்

சித்திரை வருட பிறப்பு என்றால் என்ன.?

தமிழ் வருடங்களில் மொத்தம் 60 வருடங்கள் உள்ளது. அந்த 60 வருடங்களில் தற்போது நாம் இருப்பது 37 வது வருடமான சோபகிருது வருடம் ஆகும். இந்த சோபகிருது வருடம் 60 ஆண்டுகளில் ஒருமுறை தான் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 14, 2023 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 13, 2024 வரை உள்ள ஆண்டு சோபகிருது வருடம் ஆகும்.

இந்த சோபகிருது வருடம் முடிந்து அதற்கு அடுத்த வருடமாக வருவது குரோதி வருடம் ஆகும். இந்த வருடம் தான் தற்போது பிறக்க இருக்கிறது. அதாவது, ஏப்ரல் 13.04.2024 சனிக்கிழமை இரவு 08 மணி 15 நிமிடத்தில் குரோதி வருடம் பிறக்கின்றது.

12 ராசிகளுக்கான தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

 

Advertisement