Vasambu Deepam in Tamil
ஆன்மிக நெஞ்சம் கொண்ட அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய ஆன்மிக பதிவில் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அது என்ன தகவல் என்றால் வசம்பு தீபம் பரிகாரம் பற்றி தான். வசம்பு என்பது மிகுந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது என்று நாம் அனைவருக்கும் தெரியும் ஆனால் அதனை வைத்து தீபம் ஏற்றுவதால் நமது வீடுதேடி மிகுந்த நன்மைகள் மற்றும் மிகுந்த பணவரவை அளிக்கிறது.
அதனால் இந்த வசம்பு தீபத்தை எவ்வாறு ஏற்ற வேண்டும் எப்பொழுது ஏற்ற வேண்டும் என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் விரிவாக காணலாம்.
வசம்பு பரிகாரம்:
நாம் அனைவருக்கும் உள்ள மிக பெரிய பிரச்சனை என்றால் பணவரவு குறைந்து காணப்படுவதுதான். நாமும் இந்த பணவரவு குறைபாட்டை நீக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் பல முயற்சிகளை செய்திருப்போம். ஆனால் அவையாவும் அளிக்காத பலனை இந்த வசம்பு தீபம் பரிகாரம் அளிக்கிறது. அதனால் இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
வசம்பு பரிகாரம் செய்யும் முறை:
இந்த வசம்பு தீப பரிகாரம் செய்வதற்கு முதலில் ஒரு விளக்கை எடுத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அதில் திரி போட்டு எண்ணெய் ஊற்றி கொண்டு பின்னர் அந்த விளக்கில் சிறிதளவு பச்சைக் கற்பூரத்தை பொடியாக செய்து சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்து இந்த விளக்கின் உள்ளே சிறிய துண்டு வசம்பை போட்டு கொள்ளுங்கள். பின்னர் தீபத்தை ஏற்றுங்கள். இப்பொழுது எரிந்துகொண்டிருக்கும் தீபச்சுடரின் மேலேயும் ஒரு வசம்பு துண்டை வையுங்கள்.
பின்னர் இந்த விளக்கை ஒரு பூஜை தட்டில் வைத்து உங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள். இந்த தீபத்தில் இருந்து வரும் நறுமணம் வீடு முழுவதும் பரவுவதால் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி நமது வீடுதேடி பல நன்மைகள் மற்றும் பணவரவும் வருவதை நீங்களே காணலாம்.
இந்த தீபத்தை திங்கட்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களிலும் ஏற்றுவது மிகுந்த நன்மையை அளிக்கும்.
எப்பேர்ப்பட்ட ஏழை கூட பணக்காரராக மாற்றும் வசம்புபணம் பெருக வசம்பை உங்கள் வீட்டில் இப்படி வையுங்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |