தலைக்கு மேல் பல்லி சொல்லும் பலன்
வணக்கம் நண்பர்களே… இன்றைய ஆன்மிகம் பதிவில் தலைக்கு மேல் பல்லி சொல்லும் பலன் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். நம் அனைவரின் வீட்டிலும் பல்லி கட்டாயம் இருக்கும். அந்த பல்லி தினமும் ஒரு சத்தம் கொடுத்து கொண்டே இருக்கும்.
பல்லி சத்தம் போடுவதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா..? அல்லது அதற்கான காரணத்தை என்றாவது யோசித்து இருக்கிறீர்களா..? வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் தலைக்கு மேல் பல்லி என்ன சொல்கிறது. பல்லி சொல்லும் பலன் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளாலாம்.
இதையும் பாருங்கள் —> பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா..?
தலைக்கு மேல் பல்லி என்ன சொல்கிறது..?
நம் அனைவரின் வீட்டு சுவர்களிலும் வாழும் ஒரு உயிரினம் தான் பல்லி. அந்த பல்லி ஒருவிதமான சத்தத்தை எழுப்பும். அந்த சத்தத்தை நாம் அனைவரும் கேட்டிருப்போம். பல்லி எழுப்பும் சத்தத்தை வைத்து நாம் சில விஷயங்களை அறிந்திருப்போம். அதுபோல பல்லி எந்த திசையில் சத்தம் போட்டால் என்ன பலன் என்பதை தெரிந்து கொள்வோம்.
கிழக்கு திசையில் பல்லி சத்தம் போட்டால் என்ன பலன்..?
கிழக்கு திசையில் பல்லி சத்தம் போட்டால் அது உங்களுக்கு ஏதோ ஒரு பயத்தை உங்களுக்கு முன் கூட்டியே தெரியப்படுத்துகிறது என்று அர்த்தம். பல்லி கிழக்கு திசையில் சத்தம் போடுவதால் பயம் மற்றும் கெட்ட செய்தி வரப்போகிறது என்று அர்த்தம். அதனால் பல்லி கிழக்கு திசையில் சத்தம் போடுவது நல்லதல்ல.
வடக்கு திசையில் சத்தம் போட்டால் என்ன பலன்..?
பல்லி வடக்கு திசையில் சத்தம் போட்டால் நற்செய்தி வந்து சேரும். உங்களுக்கு சந்தோஷமான தருணம் ஏற்பட போகிறது என்று அர்த்தம். அதனால் பல்லி வடக்கு திசையில் சத்தம் போடுவதால் எந்த பயமும் இல்லை. நல்லதே நடக்கும்.
பல்லி மேற்கு திசையில் சத்தம் போட்டால் என்ன பலன்..?
உங்கள் வீட்டில் மேற்கு திசையில் பல்லி சத்தம் போட்டால் உங்களுக்கு ஏதாவது கஷ்டமான செய்தி வர போகிறது என்று அர்த்தம். மேற்கு திசையில் சத்தம் போடுவது கெடுதல்கள் ஏற்பட போகிறது என்பதை உங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கிறது.
பல்லி தெற்கு திசையில் சத்தம் போட்டால் என்ன பலன்..?
தெற்கு திசையில் பல்லி சத்தம் போடுவதால் எதிர்பார்க்காத தோல்வி உங்களுக்கு வரப்போகிறது என்பதை முன்பாக தெரிவிக்கிறது. தெற்கு திசையில் இருந்து சொல்வதால் கெட்ட செய்தி வரப்போகிறது என்று அர்த்தம்.
தென்மேற்கு திசையில் சத்தம் போடுவது எதற்காக..?
தென்மேற்கு திசையில் பல்லி சத்தம் போடுவதால் உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வருவதை முன்கூட்டியே தெரிவிக்கிறது என்று அர்த்தம். தென்மேற்கு திசையில் சத்தம் போடுவதால் உறவினர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படப்போகிறது என்று அர்த்தம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |