கருப்பு உப்பு பயன்கள்
உப்பு இல்லாத உணவு குப்பையில் என்று சொல்வார்கள். உணவில் சுவையை தருவது உப்பு தான். உப்பு இல்லாத எந்த உணவையும் வாயில் வைக்க முடியாது. உப்பில் பல வகைகள் உள்ளது. அதாவது கல் உப்பு, தூள் உப்பு, இந்துப்பு, கருப்பு உப்பு போன்றவை இருக்கிறது. ஆனால் நாம் சமையலுக்கு அதிகம் பயன்படுத்துவது கல் உப்பு மற்றும் தூள் உப்பு. அதனால் கருப்பு உப்பை பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கருப்பு உப்பில் தான் அதிகமான சத்துக்கள் உள்ளது. இதனுடைய நன்மைகள் பற்றி தெரிந்தால் இதனை தான் பயன்படுத்துவீர்கள். வாங்க கருப்பு உப்பின் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ உணவில் உப்பு அதிகம் சேர்த்து கொள்பவரா நீங்கள் அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க..!
கருப்பு உப்பு பற்றிய தகவல்கள்:
இந்த கருப்பு உப்பு இந்தியாவில் எளிதாக கிடைக்கூடியது. இந்த கருப்பு உப்பை இமயமலை கருப்பு உப்பு என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதனுடைய சுவை மண் போல இருக்கும். மேலும் இந்த கருப்பு உப்பில் இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.
Karuppu Uppu Benefits in Tamil:
இந்த கருப்பு உப்பை சிறிதளவு தண்ணீரில் கலந்து குடித்தால் செரிமான பிரச்சனை சரி ஆகி விடும். மேலும் இதை உணவில் சேர்த்து கொண்டால் வயிற்று பிரச்சனைகளான வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்துவிடும்.
தசை பிடிப்பு குணமாக:
சில நபர்களுக்கு தசை பிடிப்பு பிரச்சனை இருக்கும். அவர்கள் இந்த கருப்பு உப்பை அன்றாட உணவில் சேர்த்து கொண்டால் இந்த பிரச்னைகளிலுருந்து விடுபடலாம்.
இரத்த சர்க்கரை அளவு குறைய:
சர்க்கரை நோய் இல்லாத நபர்களே இல்லை. அவர்கள் கல் உப்பை 1 டம்ளர் தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடியுங்கள். இப்படி குடித்தால் இரத்த சர்க்கரையின் அளவை சரியாக வைத்திருக்க வழி வகுக்கும்.
மூட்டு வலி நீங்க:
நம் முன்னோர்கள் காலத்தில் வயதானால் மூட்டு பிரச்சனை ஏற்படும். ஆனால் இப்போது அப்படி இல்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படுகிறது. இதற்கு கல் உப்பை சூடுபடுத்தி துணியில் வைத்து கட்டி மூட்டு வலி உள்ள இடத்தில் ஒத்திரம் கொடுத்தால் மூட்டு வலி பிரச்சனை தீர்ந்து விடும்.
உடல் எடை குறைய:
இந்த உப்பை அன்றாட உணவில் சேர்த்து கொள்வதால் நம் உடலில் உள்ள கொழுப்புகளை நீக்கி உடல் எடையை சரியாக வைத்திருக்கலாம். மேலும் உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தாலும் கருப்பு உப்பை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |