காளான் பயன்கள் | Mushroom Benefits in Tamil

Advertisement

காளான் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Mushroom Benefits And Side Effects in Tamil

இந்த உலகத்தில் இருக்கும் நாம் உண்ணக்கூடிய காய்கறிகள் அனைத்திலும் சத்து அதிகமாக உள்ளது. அப்படி பல நன்மைகளை கொண்ட சாப்பாட்டு வகைகளில் காளானும் உண்டு. காளானை ஒரு சிலர் விரும்பி சாப்பிடுவார்கள், ஒரு சிலருக்கு அது பிடிக்காது. காளான் வீட்டில் சமைப்பது அரிது, ஆனால் அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டிய உணவு வகைகளில் காளான் முக்கியமானது. தினமும் சாப்பிடும் அளவிற்கு இந்த காளானில் அப்படி என்ன நன்மைகள் உள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

காளானில் இருக்கும் சத்துக்கள்:

  • ஜிங்க், காப்பர், மினரல் சத்துக்கள், பொட்டாசியம், சோடியம், ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் K, C, D, B போன்ற சத்துக்கள் உள்ளன.

எலும்பு வலு பெற :

mushroom benefits in tamil

  • காளானில் இருக்கும் இரும்பு சத்து உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிப்பதற்கும், உடலில் ஏற்படும் வீக்கங்களை சரி செய்யவும் உதவுகிறது. எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், எலும்புகளை வலுப்படுத்துவதற்கு தேவையான செலினியம் சத்து அதிக அளவில் இந்த காளான் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கிறது.

பொட்டாசியம்:

காளான் பயன்கள்

  • உணவு காளான்கள் அனைத்திலும் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளது. ஏழு நாட்களுக்கு ஒருமுறை காளானை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலில் ரத்த அழுத்தம் குறையாமல் இருக்க உதவுகிறது. மேலும் உடலுக்கு சக்தியை கொடுக்கும் விட்டமின் டி சத்து இதில் அதிக அளவில் இருக்கிறது.

உடல் எடை குறைய: 

mushroom health benefits in tamil

  • உடல் பருமனாக உள்ளவர்கள் கொழுப்பை குறைப்பதற்கு நார்ச்சத்து நிறைந்த மற்றும் கொழுப்பு இல்லாத காளானை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறைந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.

நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க :

mushroom benefits in tamil language

  • ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை தாக்கும் நுண்ணுயிரிகளை அளிப்பதற்கு காளானில் இருக்கும் எர்கோத்தியோனின் எனும் மூலப்பொருள் உதவுகிறது.

புற்றுநோய் – காளான் பயன்கள்:

mushroom benefits and side effects in tamil

  • மார்பக புற்று, பிராஸ்ட்ரேட் புற்றுநோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் காளான் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த சோகை உள்ளவர்களுக்கு காளான் ஒரு சிறந்த மருந்து, இதில் இருக்கும் இரும்புச்சத்து ரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த:

  • காளானில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும் மற்றும் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. பக்கவாதம், இதய நோய் ஏற்படுவதற்கு காரணமான கொலஸ்ட்ராலை சரியான விகிதத்தில் வைத்து கொள்ள உதவுகிறது.

காளான் பயன்கள்

  • பற்கள், நகங்கள், முடி வளர்ச்சிக்கு தேவையான செலினியம் சத்து அதிக அளவில் உள்ளது. மேலும் ஈறுகளை பலப்படுத்துவதற்கு இதில் இருக்கும் செம்பு சத்து உதவுகிறது.

குடல் ஆரோக்கியம்:

காளான் ஆனது நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தூண்டுவதற்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

இவற்றில் இருக்கும் இரும்பு சத்து ஆனது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பதிதியை அதிகரித்து இரத்த சோகை பிரச்சனையிலிருந்து நம்மை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

மூட்டு வலி பிரச்சனை இருக்கிறவர்கள் காளானை உணவில் எடுத்து கொள்வதன் மூலம் இதிலிருந்து தப்பித்து கொள்ள முடியும்.

மேலு இவை நம்முடைய உடலில் செலினியம் என்ற சத்தை அதிகப்படுத்தி பற்கள், நகங்கள் , தலைமுடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது.

காளான் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்:

  1. குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் காளான் சாப்பிட கூடாது.
  2. கீல்வாதம் உள்ளவர்கள் காளான் சாப்பிட கூடாது.
  3. காளான் செரிமானம் அடைவதற்கு தாமதம் ஏற்படும் அதனால் மதியம் சாப்பிடுவது நல்லது.
  4. ஒரு சில காளான்கள் விஷத்தன்மை உடையவை ஆதலால் காளானை நன்கு பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.
  5. காளான் வாங்கிய இரண்டு நாட்கள் Fridge-ல் வைத்து பயன்படுத்தலாம், அதற்கு மேல் உபயோகப்படுத்த கூடாது.
  6. பிசுபிசுப்பான காளான் வகைகளை சாப்பிட கூடாது.
பாகற்காயின் மருத்துவ பயன்கள்
தக்காளி பழத்தின் மகத்தான மருத்துவ பயன்கள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement