Sarivigitha Unavu in Tamil
இன்றைய சூழலில் நோயில்லாமல் வாழ்வது ஒரு கடினமான விஷயமாக உள்ளது. நம்முடைய ஆரோக்கியத்திற்கு உண்ணும் உணவு சத்தானதாக இருப்பது அவசியம். உடல் உறுப்புகள், செல்கள் போன்றவை சீராக இயங்குவதற்கு ஆதாரமாக விளங்குவது நம்முடைய உணவு முறை தான். சத்தான உணவுகளை உட்கொள்ளவில்லை என்றால் உடல் சோர்வு, தொற்று ஏற்படுவது போன்ற பல நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இது போன்ற தொற்றுக்கள் ஏற்படாமல் இருப்பதற்கு நாம் உண்ணும் உணவை சரிவிகித உணவாக எடுத்து கொள்ள வேண்டும். நாம் இந்த பதிவில் என்ன மாதிரியான சீரான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
சரிவிகித உணவு என்றால் என்ன?
- ஒரு நாளைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரியான விகிதத்தில் கிடைப்பது சரிவிகித உணவு எனப்படும்.
- ஒரு நாளுக்கு நமக்கு உடல் சீராக இயங்குவதற்கு கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் கண்டிப்பாக தேவை.
சரிவிகித உணவின் முக்கியத்துவம் யாது?
- Balanced Diet Food Chart in Tamil: இந்த அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ள உணவுகளை எடுத்து கொள்வது தான் சரிவிகித உணவு.
- எந்த விதமான ஊட்டச்சத்துக்களையும் நீங்கள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ எடுத்துக்கொண்டால் உடல் பருமன் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு சரிவிகித உணவு மிகவும் முக்கியம்.
சரிவிகித உணவு அட்டவணை:
Balanced Diet Chart in Tamil |
கார்போஹைட்ரேட் |
2 சப்பாத்தி, 1 கப் சாதம், இடியாப்பம், ரொட்டி துண்டுகள் |
காய்கறிகள் மற்றும் பருப்பு |
வேகவைத்த காய்கறிகள், 1 கப் பருப்புகள் |
பால் பொருட்கள் |
1 டம்ளர் பால் அல்லது தயிர்/ வெண்ணெய்/ பாலாடைக்கட்டி |
இறைச்சி |
முட்டை 1, இறைச்சிகள் 70 – 75 கிராம்ஸ் |
பழங்கள் |
உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு பழம் |

தானியங்கள்:

- Balanced Diet Chart in Tamil: உங்களுடைய அன்றாட வேலை செய்வதற்கு தேவையான ஆற்றல் கார்போஹைட்ரேட்டில் இருந்து கிடைப்பதால் இந்த ஊட்டச்சத்து உணவில் இருப்பது மிகவும் அவசியம்.
- இதற்கு நீங்கள் இட்லி, சப்பாத்தி, சாதம், ஓட்ஸ், ராகி போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும்.
பழங்கள், காய்கறிகள்:

- உடல் ஆரோக்கியம் மேம்பட வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை எடுத்திகொள்ள வேண்டும். காய்கறிகள் பழங்கள் போன்ற உணவுகளில் வைட்டமினைகளும் மினரல்களும் நிறைந்திக்கிறது. எனவே தினமும் காய்கறிகள் மற்றும் நார்சத்து நிறைந்த பழங்களை நாம சாப்பிட வேண்டும். இதனால் புற்றுநோய் வராமல் தடுக்கும். மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
பால் மற்றும் பால் பொருட்கள்:

- உடல் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்துக்கள் மிகவும் அனாவசியமானது எனவே கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பால், பன்னீர், சீஸ், தயிர், நெய், மோர் போன்றவதாரி உண்பதால் எலும்பு பிரச்சனைகள் நீங்கும்.
இறைச்சி வகைகள்:

- அசைவம் சாப்பிடுபவர்கள் தினமும் 1 முட்டை எடுத்துக்கொள்ளலாம். மீன், கோழி, ஆடு போன்ற இறைச்சி சாப்பிட்டால் 70 – 75 கிராம் வரை எடுத்து கொள்ள வேண்டும்.
எண்ணெய்:

- Sarivigitha Unavu in Tamil: எண்ணெயை உணவில் மிக குறைந்த அளவு சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
பருப்பு மற்றும் நட்ஸ்:

- சரிவிகித உணவு அட்டவணை: இதற்கு நீங்கள் பருப்பு வகைகள், நட்ஸ் வகைகள், Dry Fruits, காய்கறிகள், பழங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும்.
- சரிவிகித உணவுகளில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் மட்டுமல்ல Micro nutrients-ம் உண்டு. சத்தான உணவுகள் என்பதில் கம்பு, கேழ்வரகு, கீரைகள் போன்றவையும் அடங்கும்.
தவிர்க்க வேண்டியவை:

- உப்பு மற்றும் சர்க்கரை இரண்டையுமே குறைவான அளவு எடுத்து கொள்ள வேண்டும். நாட்டு சர்க்கரையை பெரும்பாலும் எடுத்து கொள்வது நல்லது.
- ஊறுகாய், அப்பளம், கருவாடு போன்ற உப்பு அதிகம் உள்ள உணவுகளை பெரும்பாலும் தவிர்த்து கொள்ளுங்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
Health Tips in Tamil |