ஏபிசி ஜூஸ் பெனிபிட்ஸ் | Benefits of ABC Juice in Tamil
இன்றைய சூழலில் மக்கள் அனைவரும் இயற்கையான உணவு முறைக்கு மாறி வருகின்றனர். உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்து கொள்வதற்கு பலவிதமான உணவுகளையும், பழங்களையும், பானங்களையும் உண்டு வருகின்றனர். ஆரோக்கியமான உணவு முறையில் ஜூஸ் முதலிடம் வகிக்கிறது என்றே சொல்லலாம். காலையில் மக்கள் எழுந்தவுடன் குடிக்கும் ஜூஸ் வகைகளில் ஒன்று தான் ஏபிசி ஜூஸ். அது என்ன ABC ஜூஸ் என்று தானே யோசிக்கிறீர்கள். ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் மூன்றும் சேர்த்து தயாரிக்கப்படும் ஜூஸ் தான் ABC ஜூஸ். இந்த பழங்களை தனித்தனியாக சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும் என்று தெரியும். ஆனால் இந்த ABC ஜூஸ் குடித்தால் என்ன பயன்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.
புற்றுநோய் சரி செய்ய:

- ABC Juice Benefits in Tamil: ஏபிசி ஜூஸ் காலையில் குடிப்பதன் மூலம் உடம்பில் புற்றுநோய் உருவாகும் செல்களின் வளர்ச்சியை தடுக்கவும், புற்றுநோயிலிருந்து விடுப்படவும் பெரிதும் உதவி வருகிறது.
வயிற்றுப் புண் குணமாக:

- ஏபிசி ஜூஸ் நன்மைகள்: காலை உணவை பலரும் வேலையின் காரணமாக தவிர்த்து வருகின்றனர். இதனால் அல்சர் உருவாகிறது. குடல் புண்ணையும், வயிற்று புண்ணையும் குணப்படுத்த இந்த ஏபிசி ஜூஸ் பயன்படுகிறது.
- மேலும் சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகம் சார்ந்த நோய்கள் வராமல் பாதுகாக்க உதவுகிறது.
பார்வை திறன் அதிகரிக்க:

- Benefits of ABC Juice in Tamil: நீண்ட நேரம் கணினியை பார்ப்பவர்களுக்கும், மொபைலை பார்ப்பவர்களுக்கும் கண் எரிச்சல், கண் வலி மற்றும் பார்வை திறன் குறைய ஆரம்பிக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு கண்களை பாதுகாக்க இந்த ஏபிசி ஜூஸ் உதவுகிறது.
உடல் சோர்வை நீக்க:

- ABC Juice Benefits in Tamil: உடற்பயிற்சி எதுவும் செய்யாமல், புதிதாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உடல் வலி, கால் வலி, அசதி ஏற்படும். அவற்றை சரி செய்ய உதவுகிறது. மேலும் உடல் சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்க இந்த பானம் உதவுகிறது.
வாய் துர்நாற்றம் நீங்க:

- ஏபிசி ஜூஸ் நன்மைகள்: குடல் புண் இருந்தால் ஒரு சிலருக்கு வாய் துர்நாற்றம் ஏற்படும். வாய் துர்நாற்றத்தை சரி செய்ய இந்த பானம் உதவும்.
- செரிமான பிரச்சனைகளை சரி செய்யவும், மூளை மற்றும் இதயத்தை பாதுகாக்கவும் பெரிதும் உதவும்.
உடல் எடை குறைய:

- ABC Juice Benefits in Tamil: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அனைவருக்கும் அளிக்கப்படும் உணவு என்றால் அது ஜூஸ் தான். அந்த வகையில் உங்கள் எடையை விரைவாக குறைப்பதற்கு இந்த ஏபிசி பானம் உங்களுக்கு உதவும்.
சருமத்திற்கு:

- ABC Juice Benefits for Skin in Tamil: நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களை பொறுத்து தான் நம்முடைய சருமம் அழகாக இருக்கும். அந்த வகையில் இந்த ஏபிசி ஜூஸ் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை சரிசெய்யும். வயது முதிர்வை தடுக்கவும் உதவும்.
தேவையான பொருட்கள்:

- ஆப்பிள் – 1
- கேரட் – 1
- பீட்ரூட் – 1
ஏபிசி ஜூஸ் செய்வது எப்படி?
- Benefits of ABC Juice in Tamil: ஆப்பிள், கேரட், பீட்ரூட் நன்கு கழுவி கொள்ளவும்.
- பின் அவற்றின் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- பின் இந்த துண்டுகளை மிக்ஸியில் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
- பின் அதை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும். எலுமிச்சை சாறு விருப்பம் இருந்தால் மட்டும் சேர்க்கவும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆரோக்கியமும் நல்வாழ்வும் |