ஆடாதோடை இலையின் மருத்துவ குணம் | Adhatoda Leaf Uses in Tamil

Advertisement

ஆடாதோடை பயன்கள் | Adhatoda Leaf Uses in Tamil

Ada Thoda Ilai: சித்தர்கள் பயன்படுத்திய பல மூலிகை வகைகளில் ஆடாதோடை மிகவும் முக்கியமானது. இந்த இலையின் அறிவியல் பெயர் Adhatoda vasica. வாசை என்ற  வேறு பெயறும் உண்டு. இது Acanthaceae என்ற தாவர குடும்பத்தை சார்ந்தது. இந்த இலையை ஆடுகள் சாப்பிடாது என்ற காரணத்தால் இதற்கு “ஆடாதோடை ” என்ற பெயர் வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது. இது மாவிலை, நுணா இலை போன்று நீண்ட வடிவத்தில் பெரிய இலையாக இருக்கும். இதனுடைய பூ, இலை, வேர், பட்டை என அனைத்தும் மருத்துவ குணமுடையது. சரி இந்த ஆடாதோடையில் அப்படி என்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்று இந்த பதிவில் படித்தறியலாம் வாங்க.

ஆடாதோடை பயன்கள்:

ஆடாதொடை இலை

  • ஆடாதோடை இலை பொதுவாக இருமல், சளி மற்றும் தொண்டைக் கட்டுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்த இலைகளில் அல்கலாய்டு என்ற வேதிப்பொருள்கள் இருப்பதால் நுரையீரல் சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
  • ஆடாதோடின், வைட்டமின் சி, கேலக்டோஸ், டானின், அல்கலாய்டுகள் போன்ற  வேதிப்பொருள்கள் உள்ளன

சளியை குணப்படுத்த – ஆடாதோடை மருத்துவ குணம்:

  • தொண்டை கரகரப்பு, அதிக சளி மற்றும் சுவாசப் பாதைகளை சீராக வைத்துக்கொள்ளவும், நோய்களை குணப்படுத்தவும் உதவுகிறது.

ஆடாதொடை பயன்கள்

  • குடலில் உள்ள புழுக்கள், வயிற்று புழுக்கள் ஆகியவற்றை சரி செய்யவும், இரத்த தட்டுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது.

புற்றுநோய் வராமல் தடுக்க – ஆடாதோடை பயன்கள்:

  • இரத்த அழுத்தத்தை குறைக்கவும், நரம்பு சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்யவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

ஆடாதொடை இலை

  • வயிற்று எரிச்சலை சரி செய்யவும், சீத கழிச்சல் சரி செய்யவும், கர்ப்ப பைகளை வலுப்படுத்தவும், உடலில் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுத்து புற்று நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

இருமலை குணப்படுத்த – Adhatoda Leaf Uses in Tamil:

  • ஆடாதோடை இலையை  நீரில் கொதிக்க வைத்து அதனை வடிகட்டி அந்த சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் குணமாகும்.

adhatoda leaf uses in tamil

  • மூச்சு திணறல் மற்றும் இருமல் உள்ளவர்கள் இந்த இலையுடன் திப்பிலி, ஏலம், அதிமதுரம், தாளிசப்பத்திரி போன்றவற்றை நீரில் சேர்த்து குடித்தால் குணமாகும்.
  • அதிக இருமல் உள்ளவர்கள் இந்த இலையின் வேர் மற்றும் கண்டங்கத்திரி வேர், திப்பிலி பொடி ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் குணமாகும்.

மஞ்சள் காமாலையை குணப்படுத்த – Adathodai Leaf Benefits in Tamil

ஆடாதோடை மருத்துவ குணம்

  • இரத்தக் கொதிப்பு மற்றும் மஞ்சள் காமாலையை குணப்படுத்த நினைப்பவர்கள் ஆடாதோடை இலை சாறை தேன் கலந்து சாப்பிட்டால் விரைவில் குணமாகும்.
  • மேற் கூறப்பட்ட நோய்களை குணப்படுத்த கீழே கொடுக்கப்பட்டிருக்கும் செய்முறைகளை பயன்படுத்தலாம்.
வில்வம் மருத்துவம் பயன்கள்

ஆடா தொடை இலை சாப்பிடும் முறை – Adathodai Benefits Tamil

  • முதலில் இரண்டு டம்ளர் தண்ணீரில் ஆடாதோடை இலை 5 மற்றும் வெற்றிலை 2, மிளகு 5 எடுத்து கொண்டு அதில் 1 டேபிள் ஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின் அது பாதியாக வற்றியவுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருகி வரலாம்.
தூதுவளை மருத்துவ பயன்கள்

ஆடாதோடை மருத்துவ குணம் – செய்முறை: 2

  • வெற்றிலை 1, ஆடாதோடை இலை 1 மற்றும் மிளகு 2 அதனுடன் தேன் சேர்த்து மடித்து காலை, மாலை இரு வேலைகளில் சாப்பிடலாம்.

Adhatoda Leaf Uses in Tamil – செய்முறை: 3

  • ஆடாதோடை இலையை பொடியாக செய்து கொள்ளவும். பின் கால் டேபிள் ஸ்பூன் ஆடாதோடை இலை பொடி, மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும். பின் அதனை தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து தினமும் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
  • ஆடாதோடை இலை மற்றும் வெற்றிலையை சாப்பிடும் போது அதில் உள்ள நரம்பு மற்றும் காம்புகளை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement