உங்களுக்கு தெரியுமா..? தேங்காய் சாப்பிடுவதனால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்று…

Coconut Side Effects

நமது உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் காய்கறிகள் மற்றும் பழங்களில் தான் உள்ளது. அதனால் தினமும் ஏதோ ஒரு காயினை நமக்கு பிடித்த மாதிரி சமைத்து சாப்பிடுகிறோம். நமக்கு பிடிக்காத சாப்பாட்டினை சாப்பிடாமல் தவிர்த்து விடுவோம். ஆனால் எந்த வகையான சாப்பிட்டானை செய்தாலும் அதில் கட்டாயமாக தேங்காய் சேர்த்து சமைப்பது அனைவருடைய வீட்டிலும் உள்ள ஒரு வழக்கம். அதிலும் சிலருக்கு தேங்காய் சேர்க்காமல் செய்து சாப்பாடு பிடிக்கவே பிடிக்காது. இப்படி நாம் தினமும் சாப்பாட்டில் தேங்காய் சேர்த்து கொள்வதனால் சில தீமைகளும் உள்ளது. ஆகையால் தேங்காய் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ளலாம்.

தேங்காய் பால் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:

உடல் எடை அதிகரிக்க:

உடல் எடை அதிகரிக்க

நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும் தேங்காயில் கொழுப்புகள் மற்றும் அதிக கலோரிகள் உள்ளது. ஆகையால் தேங்காயை நாம் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் உள்ள கலோரிகள் அதிகரித்து விரைவில் உடல் எடையை அதிகரிக்க செய்யும்.

மலச்சிக்கல் பிரச்சனை:

மலச்சிக்கல் பிரச்சனை

மற்ற உணவுகளை போல இல்லாமல் தேங்காயில் நிறைய நார்சத்து உள்ளது. பொதுவாக எந்த பொருளாக இருந்தாலும் நார்ச்சத்து அதிகாமாக உள்ளதை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் வயிற்று வலி, வயிற்று போக்கு, மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளை வரச்செய்யும்.

ஆகவே அளவுக்கு அதிகமாக தேங்காய் எடுத்துக்கொள்வதன் மூலம் எந்த விதமான தீமைகளும் வராமல் தடுக்க முடியும்.

உடலில் அலர்ஜி:

உடலில் அலர்ஜி

தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் இவை இரண்டும் உடலில் ஏற்படும் அலர்ஜிக்கு நல்ல தீர்வினை பலருக்கு கொடுத்தாலும் கூட சிலருக்கு அவை ஒற்றுக்கொள்வது இல்லை.

அதனால் தேங்காய் சாப்பிடுவதன் காரணமாக உடலில் அலர்ஜி மற்றும் படை போன்ற அறிகுறிகள் இருந்தால் அதனை அலட்சிய படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

அதிகமான கொழுப்பு:

அதிகமான கொழுப்பு

நாம் சாப்பிடும் பழம், காய்கறி இவற்றை பார்க்கும் போது தேங்காயில் 90% கொழுப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் அளவுக்கு அதிகமாக தினமும் தேங்காய் சாப்பாட்டில் சேர்த்து கொள்வதன் விளைவாக நம்முடைய உடலில் கொழுப்பு சத்தினை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க செய்து பிறகு பக்க வாதம் மற்றும் இதயம் சம்மந்தமான நோய்களை ஏற்படுத்தும்.

குடல் பிரச்சனை:

குடல் பிரச்சனை

தேங்காயில் இருந்து தயாரிக்கும் எண்ணெயிலும் சில தீமைகள் உள்ளது. தேங்காய் எண்ணெய் முடி, புண் மற்றும் சமையல் என நிறையவற்றைக்கு பயன்படுகிறது. இந்த தேங்காய் எண்ணெய் சிலருக்கு சமையலில் சேர்த்து சாப்பிட்ட பிறகு குடல் சம்மந்தமான பிரச்சனைகள் வருவதற்கு ஒரு காரணமாக உள்ளது.

தேங்காய் சாப்பிட வேண்டிய நபர்கள்:

  • வயிற்று வலி உள்ளவர்கள்
  • வயிற்று புண் உள்ளவர்கள்
  • வாய்ப்புண் உள்ளவர்கள்

தேங்காய் சாப்பிடக்கூடாத நபர்கள்:

  • கொலஸ்ட்ரால் உள்ளவர்கள்
  • கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்
  • அதிக உடல் எடை உள்ளவர்கள்
  • பி.பி உள்ளவர்கள்

ஆகவே எதையும் நாம் அளவோடு சாப்பிடுவதன் மூலம் பாதுகாப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் வாழலாம். அதுபோல மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே மேலே சொல்லப்பட்டுள்ள நபர்கள் சரியான அளவில் தேங்காய் சாப்பிட வேண்டும். 

இதையும் படியுங்கள்தேங்காய் பால் நன்மைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Health Tips In Tamil