கருவுற்ற பெண்கள் தவிர்க்க வேண்டியவை
நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை தினமும் படித்து தெரிந்த்துக்கொண்டு தான் வருகிறோம் அல்லவா..? அந்த வகையில் இன்று கர்ப்பமாக இருக்கும் பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதை இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்துகொள்வோம்.
கர்ப்பமாக ஆகிவிட்டால் இதை தான் செய்யவேண்டும் இதை செய்ய கூடாது என்று நிறைய விஷயம் இருக்கும். அது அனைத்தையும் செய்தால்தான் நல்லமுறையில் குழந்தை பிறக்கும் ஆனால் இப்போது அப்படி எதையும் கடைபிடிபதில்லை. கடைபிடிக்க வேண்டியவை என்ன என்பதை இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்துகொள்வோம்.
கருவுற்ற பெண்கள் தவிர்க்க வேண்டியவை:
கர்ப்பிணி பெண்கள் முதலில் அதிக எடை உள்ள பொருட்களை தூக்க கூடாது. அதேபோல் தூங்கும் போது குப்பிறக்க படுக்கக்கூடாது. அதேபோல் மல்லக்காகவும் படுத்து தூங்க கூடாது.
மல்லாக்க படுத்து தூங்கினால் குழந்தையின் எடை உங்களின் இரத்தகுழாயை அழுத்துவதால் மூச்சு விடுவதற்கு சிரமப்படுவீர்கள். உங்களுக்கு மூச்சு காற்று குறையும் போது குழந்தைக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும்.
கருவுற்ற பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
கருவுற்ற பெண்கள் அரைவேக்காட்டு பொருட்களை சாப்பிடக்கூடாது. அதற்கு காரணம் வேகவைத்த பொருட்களில் கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும், ஆகவே அரைவேக்காட்டு பொருட்களை சாப்பிடத்தை தவிர்க்கவும்.
மேலும் அன்று சமைக்கும் பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும். முதல் நாள் செய்த குழம்புகளையும், அழுகிய பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
குளிர்ச்சி பானங்கள்:
அளவுக்கு அதிகமான குளிர்ச்சியான பானம் குடிக்கக்கூடாது அதுவும் உடலுக்கு அதிக சூட்டை ஏற்படுத்தும்.
மேலும் பழச்சாறுகளை குடிக்க வேண்டாம், ஏனென்றால் உடலுக்கு அளவுக்கு அதிகமான சர்க்ரையை ஏற்படுத்தும். இது டெலிவரிக்கு பிறகும் கடைபிடிக்க வேண்டும்.
உடல் அசைவு:
மன அழுத்ததை கொடுக்கும் எந்த ஒரு விஷயத்தையும் செய்யவேண்டாம். அது உங்களுக்கு மனம் அழுத்ததையும், உடலில் தேவையில்லாத அசதியையும் அளிக்கும்.
கீழ் இருக்கும் எடை உள்ள பொருட்களை எடுத்து இடுப்பில் வைப்பது, குதிப்பதை, வேகமாக நடப்பது, கைக்கு எட்டாத பொருட்களை எடுக்க நினைப்பது. படி ஏறுதல் என இதுபோன்ற காரியங்களை செய்வதை தவிர்க்கவும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 கர்ப்பிணி பெண்கள் தூங்கும் முறை
உடல் பாதுகாப்பு:
அதிக இறுக்கமான ஆடையை அணியகூடாது. அதேபோல் உள்ளாடைகளையும் இறுக்கமாக போடகூடாது, கற்பகாலத்திக்கென்று தனியாக உள்ள ஆடைகளையும் அல்லது இறுக்கம் இல்லாத ஆடையையும் அணியவும்.
கர்ப்பமாக இருந்தால் முகத்திற்கோ அல்லது தலைக்கோ எந்த கிரீம்களை பயன்படுத்தகூடாது. முன்பு பயன்படுத்திய பொருட்களை அளவாக பயன்படுத்துங்கள்.
உங்கள் வயிற்றி ஏதேனும் வலி இருந்தால், காய்ச்சல், தலைவலி போன்றவைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி மட்டும் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை சாப்பிடுங்கள்.
சாதாரண எக்ஸ்ரே எடுப்பதை தவிர்க்கவும். அதிகமாக அலைச்சல் இருக்கக்கூடாது மனதையும் உடலையும் சாதாரணமாக வைக்கவும்.
இதையும் கடைபிடியுங்கள் 👉👉 கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டிய உணவு அட்டவணை
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |