ஆரோக்கியமான கல்லீரலுக்கு நாம் தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன..?

Advertisement

Foods to Strengthen The Liver

நமது உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நமது உடல் ஆரோக்கியம் என்பது நமது உடலில் உள்ள உறுப்புகளின் அடிப்படையில் தான் இருக்கிறது. அத்தகைய முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று.  தினமும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்புகள் மற்றும் நச்சுக்கள் இருப்பதை சரி செய்து மற்றும் தேவையில்லாததை வெளியேற்றி நமது உடலிற்கு தேவையான இரத்ததை அனைத்து பகுதிகளுக்கும் கல்லீரல் கொண்டு செல்கிறது. அதுமட்டும் இல்லாமல் நமது உடலில் உள்ள பித்தத்தை வெளியேற்றவும், இரத்தத்தை சுத்திகரிக்கவும், வைட்டமின் சத்துக்களை சேமிக்கவும் மற்றும் நச்சுக்களை வெளியேற்றவும் கல்லீரல் அதன் வேலையை செய்கிறது.  

நமது உடலில் பல விதமான வேலையை செய்யும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க நாம் தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் மிகவும் தெளிவாக தெரிந்துகொள்ளவோம் வாருங்கள்.

கல்லீரல் பலம் பெற உணவுகள்

பூண்டு:

கல்லீரலுக்கு ஏற்ற உணவுகள்

பூண்டில் நிறைய விதமான சத்துக்கள் இருந்தாலும் கூட அதில் இருக்கும் சல்பர் மற்றும் செலினியம் சத்தானது கல்லீரலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியதாக இருக்கிறது.

இத்தகைய சத்துக்களை கல்லீரல் நச்சுக்களை வெளியேற்றம் செய்யும் போதும் பயன்படக்கூடியதாக இருக்கிறது. அதனால் நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டில் பூண்டு சேர்த்து கொள்வது கல்லீரலுக்கு நல்லது. 

மஞ்சள்:

கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க

கல்லீரலில் கொழுப்புகள் எதுவும் சேராமல் இருப்பதற்கு மஞ்சள் சிறந்த பலனை அளிக்கிறது. அதுமட்டும் இல்லாமல் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கவும் மற்றும் புதிய செல்கள் கல்லீரலில் உருவாகவும் இது பயன்படுகிறது.

ஆகாயல் தினமும் மஞ்சளை நாம் சாப்பிடும் சாப்பாட்டில் சேர்த்து கொள்வதன் மூலம் கல்லீரலுக்கு எந்த விதமான பாதிப்பும் வராமல் நன்றாக செயல்பட செய்யலாம்.

மண்ணீரல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சாப்பிட வேண்டிய உணவுகள்

திராட்சை: 

கல்லீரல் பலம் பெற உணவுகள்

பொதுவாக திராட்சையில் என்றால் அதில் உள்ள அனைத்து பாகங்களிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இருக்கிறது. அதனால் நாம் திராட்சை அல்லது திராட்சை ஜூஸ் இவை இரண்டில் எதுவாக இருந்தாலும் நாம் சாப்பிட வேண்டும். ஏனென்றால் திரட்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆனது கல்லீரலில் வீக்கம் இருந்தால் அதனை சரி செய்து வழக்கம் போல் ஆரோக்கியமாக செயல் பட உதவுகிறது. 

பீட்ரூட்:

liver health food tamil

இன்று வரையிலும் பீட்ரூடை சமைத்து சாப்பிடுவதில் தான் சத்துக்கள் இருக்கிறது என்று நினைத்து இருக்கிறோம். ஆனால் நாம் பீட்ருட்டை சமைத்து சாப்பிடுவதை விட சாறாக உடலுக்கு எடுத்துக்கொள்வதில் தான் நிறைய சத்துக்கள் இருக்கிறது.

பீட்ரூட் சாறில் உள்ள நைட்ரேட்டுகள் ஆக்சிஜனேற்றியாகவும் மற்றும் இரசாயன கொழுப்பு கல்லீரலுக்கு எதிராக செயல்படும் ஆற்றலையும் கொண்டுள்ளதால் நாம் பீட்ரூட்டை எடுத்துகொள்ள வேண்டும்.

கல்லீரல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்..!

பச்சை காய்கறிகள்:

liver health foods to eat in tamil

பச்சை காய்கறியான முட்டை கோஸ், கீரை மற்றும் ப்ரோக்கோலி ஆகிய காய்கறிகளில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் K மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் ஆகிய சத்துக்கள் அனைத்தும் கல்லீரலின் இரத்தத்தை சுத்திகரிப்பதற்கு பயன்படுகிறது. அதனால் இந்த காய்கறிகளை நாம் தினமும் சாப்பாட்டுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement