நெய் தீமைகள் | Ghee Side Effects
பலரும் உணவு செய்யும் போது அதில் நெய் சேர்த்து சமைப்பார்கள். இன்னும் சிலருக்கு சாப்பிடும் போது நெய் போட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. சிலருக்கு தான் நெய்யை பிடிக்காது. பலருக்கும் நெய் பிடித்தமான ஒன்று. ஆனால் இந்த நெய்யில் பல நன்மைகள் இருக்கிறது. அதே போல அதில் தீமைகளும் இருக்கிறது. அதனால் நெய்யில் உள்ள சத்துக்கள், நன்மைகள், தீமைகள், யாரெல்லாம் சாப்பிட கூடாது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
நெய்யில் உள்ள சத்துக்கள்:
நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ, கே போன்ற சத்துக்கள் உள்ளது. மேலும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது.
Ghee Benefits:
உடல் உஷ்ணம் குறைய:
நெய்யை தினமும் சாப்பிடுவதனால் அவ்வளவு நன்மைகள் இருக்கிறது. அதிலும் நெய்யை காலையில் சாப்பிடும் போது உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவுகிறது.
இதையும் படியுங்கள் ⇒ எளிய முறையில் நெய் தயாரிக்கும் முறை
இதய ஆரோக்கியம்:
நெய்யில் ஆரோக்கியமான புரதம், கொழுப்புகள் இருப்பதால் உடலிற்கு நன்மைகளை அள்ளி தருகிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
கண் பார்வை அதிகரிக்க:
நெய்யில் வைட்டமின் ஏ, டி, இ, கே போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தவும், கண் பார்வையை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் மலசிக்கல், தோல் நோய்கள் போன்ற பிரச்சனை சரியாகுவதற்கு நெய்யை தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
முகம் பளபளப்பாக:
நெய்யை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் முகம் பளபளப்பாக மாற உதவி செய்கிறது.
Ghee Side Effects:
நெய்யை அளவோடு சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. அளவுக்கு அதிகமாகும் போது தான் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் கலப்படம் செய்யப்பட்ட நெய்களை தினமும் சாப்பிடும் போது உடலிற்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் முடிந்தவரை வீட்டிலேயே நெய்யை தயார் செய்து உணவில் சேர்த்து கொள்ளவும்.
நெய்யை யாரெல்லாம் சாப்பிட கூடாது.?
- பால் சாப்பிட்டால் அலர்ஜி ஆகும் என்பவர்கள் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- இதய பிரச்சனை இருப்பவர்களும் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- உடல் எடையை குறைப்பவர்கள் நெய்யை சாப்பிட கூடாது.
- செரிமான பிரச்சனைகள், மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்களும் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு நெய் சேர்த்து கொள்ளலாம்:
ஏழு மாதம் குழந்தைக்கு நெய் 4 முதல் 5 தேக்கரண்டி உணவில் சேர்க்கலாம். அதுவே மற்றவர்கள் 1 முதல் 2 தேக்கரண்டி அளவு நெய் சேர்த்து கொள்ளலாம். நெய்யை அதிக நேரம் சூடு செய்து சாப்பிட கூடாது. ஏனென்றால் நெய்யில் உள்ள கொழுப்புகள் ஆக்சிடோசினாக மாறி கெட்ட கொழுப்புகளின் அளவை அதிகரித்து இதய பிரச்சனைக்கு வழி வகுக்கும்.இதையும் படியுங்கள் ⇒ பால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்..!
இதுபோன்ற உடல் ஆரோக்கியம் பற்றிய தகவலை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Heath Tips In Tamil |