Advertisement
ஹீமோகுளோபின் குறைபாடு அறிகுறிகள் | Hemoglobin Low Symptoms in Tamil
உடலில் இரத்தத்தின் அளவு சரியாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் இப்போது இருக்கும் பழக்கவழக்கங்களும், உணவு முறைகளும் உடலில் இரத்தம் சம்மந்தமான பிரச்சனைகள் அதிகரிப்பதற்கு காரணமாகின்றன. நாம் இந்த தொகுப்பில் உடலில் ஹீமோகுளோபின் அதாவது இரத்தத்தின் அளவு குறைவதற்கான காரணங்களையும், ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் நோய்களின் அறிகுறிகளையும் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ஹீமோகுளோபின் என்றால் என்ன? – What is Meant by Hemoglobin in Tamil:
- உடலில் இரத்த சிவப்பணுக்களில் இருக்கும் ஒரு வகையான புரதம் ஹீமோகுளோபின் ஆகும். இது செல்களுக்கும், திசுக்களுக்கும் ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவும்.
- உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், நோயிலிருந்து உடலை பாதுகாப்பதற்கும் ஹீமோகுளோபின் மிகவும் அவசியம்.
HB Normal Range in Tamil:
- பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 12 முதல் 16 வரை இருக்க வேண்டும்.
- ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 14 முதல் 18 வரை இருக்க வேண்டும்.
ஹீமோகுளோபின் குறைய காரணம்:
- Hemoglobin Low Symptoms in Tamil: மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு காரணமாக பெண்களுக்கு உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையலாம். இந்த குறைபாட்டை சரிக்கட்டுவதற்கு ஏற்ற வகையில் உணவு எடுத்து கொள்ள வேண்டும்.
- இரும்பு சத்து குறைவாக உள்ள உணவை உண்ணும் போதும், வைட்டமின் B12 அளவு குறையும் போதும் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது.
- தேநீரில் இருக்கும் டானின் எனும் வேதிப்பொருள் 64% உடலில் இருக்கும் இரும்புச்சத்தை உறிஞ்சுகிறது, அது போல காஃபியில் இருக்கும் காஃபின் எனும் பொருள் 39% இரும்புச்சத்தை உறிஞ்சுகிறது. இதனால் ஹீமோகுளோபின் அளவு சாதாரண நிலையை விட குறைந்து காணப்படும்.
- அல்சர், நீரிழிவு, வைட்டமின் சி குறைபாடு போன்ற காரணங்களால் கூட இரத்தத்தின் அளவு உடலில் குறைவதற்கு காரணமாகின்றன.
- செரிமான பாதையில் ஏற்படும் நோய்கள் போன்ற காரணங்களால் உடலில் இரத்தத்தின் அளவு குறையலாம்.
- கடைகளில் விற்கும் குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை அருந்துவதால் அதில் இருக்கும் நச்சுக்கள் குடலில் இருக்கும் இரும்புச்சத்தை உறிஞ்சுகின்றன.
Hemoglobin Deficiency Symptoms in Tamil:
- Hemoglobin Low Symptoms in Tamil: ஹீமோகுளோபின் அளவு குறைவதால் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் அளவு சரியான விகிதத்தில் சென்றடையாது, இதனால் உடம்பில் நோய்கள் வர ஆரம்பித்து விடும்.
- உடல் சோர்வு அதிகமாக இருக்கும். வேலை செய்யாமல் சும்மாக இருந்தாலும் உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.
- மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி, மயக்கம், பசியின்மை, கை, கால்களில் வலி, வெளிர் நிற நகங்கள், இதய துடிப்பு சீராக இல்லாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் தென்படும்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள்:
- ஹீமோகுளோபின் உடலில் அதிகரிப்பதற்கு இரும்பு சத்து நிறைந்த கீரை வகைகள், கிழங்கு வகைகள், தானியங்கள், பழங்கள் போன்றவற்றை உண்பது நல்லது.
- பேரிச்சம்பழம், கருப்பு உலர் திராட்சை, அத்திப்பழம், ஈரல், முட்டை, ஆட்டுக்கால் சூப் சாப்பிடுவது நல்லது.
- பானங்களில் வீட்டில் தயாரிக்கப்பட்ட பீட்ரூட் ஜூஸ், மாதுளை ஜூஸ், தர்பூசணி போன்றவற்றை சாப்பிடுவது சிறந்தது.
what is the normal hemoglobin level?
இரத்தம் அதிகரிக்க |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |
Advertisement