உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!

உயர் இரத்த அழுத்தம்

பொதுவாக இன்றைய காலகட்டங்களில் நிறைய நோய்கள் புதுசு புதுசாக காணப்படுகின்றன. அதுமட்டும் இல்லாமல் நோய் இல்லாமல் யாரும் நலமுடன் வாழ்கிறார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடிய ஒரு பிரச்சனையாக இருப்பது இரத்த அழுத்தம். அத்தகைய இரத்த அழுத்தத்தில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் என இரண்டு பிரிவுகளாக இருக்கின்றன. அதனால் இன்றைய பதிவில் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுப்பாட்டுக்குள் வைக்கும் உணவுகளை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறேன்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை:

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க சாப்பிட வேண்டிய 5 உணவுகளை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பீட்ரூட்:

high blood pressure tamil

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் உயர் இரத்த அழுத்தத்திற்கு சிறந்த உணவாக இருக்கிறது. இந்த பீட்ரூட்டை சாறாக தயார் செய்து 1 டம்ளர் குடித்தாலோ அல்லது உணவாக சமைத்து சாப்பிட்டாலோ நீங்கள் இதனை சாப்பிட்ட 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் உங்களுடைய உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று மருத்துவர்களால் சொல்லப்படுகிறது.

மாதுளை:

high blood pressure foods to eat tamil

மாதுளைப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் பயோஆக்டிவ் பாலிபினால்கள் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க ஒரு மருந்தாக பயன்படுகிறது. அதனால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் காலையில் 1 மாதுளை பழம் சாப்பிட்டால் நல்லது.

பூண்டு:

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் சாப்பிடும் சாப்பிட்டில் பூண்டினை கட்டாயமாக சேர்த்து கொள்ள வேண்டும். அப்படி சேர்த்து கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் குறைவதை நீங்களே உணரலாம்.

வெந்தயம்:

உயர் ரத்த அழுத்தம்

வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் கால்சியம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அதனால் நாம் தினமும் சாப்பிடும் உணவுடன் வெந்தயத்தை சேர்த்துக்கொண்டால் அது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்க்குள் வைத்து நம்மை நலமுடன் வாழ வைக்கிறது.

நீங்கள் வெந்தயம் மற்றும் வெந்தயக்கீரை இரண்டில் எதுவாக இருந்தாலும் அதனை உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

நாவல்பழம்:

உயர் ரத்த அழுத்தம் உடனடியாக குறைய

நாவல்பழத்தில் பொட்டாசியம் இருப்பதால் இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையின் அளவு ஆகியவற்றை கட்டுப்படுத்த மருந்தாக பயன்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் போது நமது இரத்த நாளங்கள் சுருங்குவதை தடுக்கிறது.

இதையும் படியுங்கள்⇒ இரத்த அழுத்தம் குறைய பாட்டி வைத்தியம்..!

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், உடல் நல ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்–> ஆரோக்கியமும் நல்வாழ்வும்