How to Lose Weight Without Exercise in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றால் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே உடல் எடை என்பது சரியான அளவில் இருப்பதில்லை. இதனால் உங்களுக்கு பல நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால் உங்களின் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள். உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு முறை தேவை. ஆனால் நம்மில் பலருக்கும் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் இருப்பதில்லை. அதனால் தான் இன்றைய பதிவில் உடல் எடையை எந்த ஒரு உடற்பயிற்சியும் செய்யாமல் குறைத்து கட்டுக்குள் கொண்டு வர உதவும் குறிப்பினை பற்றி காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் உடல் எடையை குறைத்து கொள்ளுங்கள்..!
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உடல் எடையை இப்படி கூட குறைக்க முடியுமா
Tips for Losing Weight Without Exercise in Tamil:
உடல் எடையை எந்த ஒரு உடற்பயிற்சியும் செய்யாமல் குறைத்து கட்டுக்குள் கொண்டு வர உதவும் குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் காணலாம்.
- கருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
- பட்டை – 2 சிறிய துண்டு
- பிரியாணி இலை – 2
- கிராம்பு – 5
- தேன் – 1 டீஸ்பூன்
- தண்ணீர் – 1 டம்ளர்
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> எவ்வளவு பெரிய தொப்பையையும் மூன்றே நாட்களில் குறைத்து விடலாம்
கருஞ்சீரகத்தை வறுத்து கொள்ளவும்:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகத்தை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளுங்கள்.
வெந்தயத்தை வறுத்து கொள்ளவும்:
பின்னர் அதனுடனே 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளுங்கள்.
பட்டையை சேர்த்து கொள்ளவும்:
அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 சிறிய துண்டு பட்டையை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 10 நாட்களில் தொப்பை குறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்க
பிரியாணி இலை மற்றும் கிராம்பை சேர்த்து கொள்ளவும்:
இறுதியாக அதனுடனே 2 பிரியாணி இலை மற்றும் 5 கிராம்பை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளுங்கள். பின்னர் இவற்றையெல்லாம் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து மூடி போட்ட பாத்திரத்தில் கொட்டி வைத்து கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீரை ஊற்றி அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள பொடியில் இருந்து 1 டீஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
பின்னர் அதனை வடிகட்டி அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள்.
இதனை தினமும் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் உங்களின் உடல் எடை குறைய ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips In Tamil |