கால் நரம்பு வலி குணமாக
நண்பர்களே வணக்கம் இன்று ஆரோக்கியம் பதிவில் கால் நரம்பு இழுத்தால் என்ன செய்ய வேண்டும். அதற்கேற்ற பாட்டி வைத்தியத்தை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக இந்த பிரச்சனை வயது அதிகமானவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒன்று. கால் வலியைக்கூட தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் கால் நரம்பு இழுத்துக்கொண்டால் அதன் வலி பெரிதாக தாங்கிக்கொள்ள முடியாது அந்த அளவிற்கு வலியை ஏற்படுத்தும்.
ஆனால் இந்த காலத்தில் சிறி சிறு பிள்ளைகளுக்கும் கால் நரம்பு இழுக்கிறது. அந்தளவுக்கு சத்துக்கள் குறைந்து இருக்கிறது என்று அர்த்தம். அந்த காலத்தில் சாப்பிட்ட சாப்பாடுகளுக்கும் இந்த காலத்து சாப்பாடுகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அந்த காலத்து சாப்பாடுகள் மாறிவிடலாம் அந்த காலத்து பாட்டி வைத்தியம் எப்போதும் மாறாத ஒன்று அந்த வகையில் இன்று கால் நரம்பு இழுத்தால் பாட்டி வைத்தியத்தை பார்ப்போம்.
முழங்கால் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்..! |
புளிய இலை பயன்கள்:
பொதுவாக பெரியவர்கள் சொல்லி இதனை கேட்டிருப்போம் அவ்வளவு ஏன் சின்னச்சின்ன குழந்தைகளுக்கும் தெரியும் புளிய மரத்தில் பக்கத்தில் நிக்க கூடாது என்று காரணம் அதில் ஏதோ இருக்கிறது என்று சொல்லி பயம் முறுத்துகிறார்கள். எல்லா வகையான செடி மரங்களையும் வீட்டில் வளர்க்கிறார்கள். ஆனால் புளிய மரத்தை வீட்டில் அதிகளவு வளர்க்கமாட்டார்கள், காரணம் அதில் ஐந்து வகையான ஜந்துக்கள் வாழ்கின்றது என்று அதன் வளர்க்க மாட்டார்கள்.
புளிய மரத்தில் நிழல் கூட ஆகாது என்பார்கள் காரணம் அது அதிகம் சூட்டை ஏற்படுத்தும் என்பார்கள். ஆனால் அதனுடைய இலைகள் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது வாங்க அதனை பார்ப்போம்.
- புளிய மரம் இலையில் உள்ள கொழுந்தை எடுத்து துவையல் அல்லது கூட்டு செய்து சாப்பிடுவார்கள் அப்படி சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மூட்டு வலி, இரத்தக்கட்டு, சுளுக்கு, கால் வீக்கம் ஏற்பட்டாலும் இதனை தொடர்ந்து சாப்பிட்டால் வந்தால் அதனை குணமாக்கும்.
கால் நரம்பு வலி குணமாக:
மூட்டு வலி இருக்கும் அது அதிகமாக மாறி நரம்பு வரை பாதிக்கும். இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் குணப்படுத்த ஒரே மருந்து இருக்கிறது அதனை செய்து வந்தால் வலி வந்த சுவடு இல்லாமல் மறைந்து விடும். வாங்க அதனை பார்ப்போம்.
தேவையான பொருள் ஒன்று தான் அதன் காம்பை கிள்ளி புளிய இலை இரண்டு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளவும்.
பிறகு அதனை இட்டிலி பானையில் வைத்து அவிக்க வேண்டும். அவித்த இலையை எடுத்து வலி இருக்கும் இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுக்கவும்.
பின்பு சூடு பொறுக்கும் அளவிற்கு எடுத்துக்கொண்டு அதனை வலி இருக்கும் இடத்தில் ஒரு துணியில் வைத்து கட்டி விட வேண்டும். இதை தொடந்து ஒரு நாள் இடைவேளை விட்டு கட்டி வந்தால் வலி மறைந்துவிடம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |