கேழ்வரகு தீமைகள் | Kelvaragu Side Effects
வணக்கம் பொதுநலம் பதிவின் இனிமையான நேயர்களே… இன்று நம் பதிவில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவலை பற்றி பார்க்கப்போகிறோம். அப்படி என்ன தகவல் என்று தானே யோசிக்கிறீங்க..? நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு பொருட்கள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அதே அளவு அதில் பக்கவிளைவுகளும் உண்டு. எந்த உணவாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுவது நல்லது. அதற்கு உதாரணமாக, “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் இன்று கேழ்வரகு சாப்பிடுவதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க…
கேழ்வரகு சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்:
கேழ்வரகு அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இருந்தாலும் இந்த கேழ்வரகை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதன் மூலம் சில பக்கவிளைவுகள் உண்டாகிறது.
- கேழ்வரகு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது.
- பசி இல்லையென்று சொல்பவர்கள் இந்த கேழ்வரகு சாப்பிடுவதை தவிர்க்கவும். காரணம், இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது.
- கேழ்வரகு சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை உண்டாகிறது. மேலும், கால்களில் வீக்கம், அஜீரண கோளாறுகள் உண்டாகிறது.
- கேழ்வரகை நாம் உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வதால் உடலில் ஆக்சாலிக் அமிலத்தின் தன்மை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி சிறுநீர் கழிப்பதில் பல சிக்கல்கள் உண்டாகிறது. மேலும் சிறுநீரக பிரச்சனை உருவாக காரணமாகிறது.
- கேழ்வரகு அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால் சிறுகுடலில் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, மலச்சிக்கல், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் உருவாகிறது.
- தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கேழ்வரகு சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். காரணம், இது தைராய்டு வீக்க காரணி சேர்மங்களை அதிகம் கொண்டுள்ளது. எனவே, இது தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு பயனளிக்காது.
கருப்பு கவுனி அரிசி அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் தீமைகள் |
குளிர்காலங்களில் கேழ்வரகு சாப்பிடலாமா?
இயல்பாகவே கேழ்வரகில் குளிர்ச்சி தன்மை அதிகம் இருக்கிறது. அதனால் மழை, பனி போன்ற காலங்களில் கேழ்வரகு சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். இதில் குளிர்ச்சி தன்மை இருப்பதால் சளி மற்றும் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் கேழ்வரகு சாப்பிடக்கூடாது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |