Mochai Kottai Benefits in Tamil
நாம் எப்போதும் சாப்பிடும் சாப்பாடு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பது பலருடைய எண்ணமாக இருக்கும். அப்படி ஆரோக்கியம் நிறைந்த உணவாக காய்கறிகளை மட்டும் தான் சிலர் நினைக்கின்றனர். ஆனால் காய்கறிகளை விட அதிகமான சத்துக்கள் சில தானியங்கள் மற்றும் பயிறு வகைகளும் இருக்கிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் மொச்சை கொட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த மொச்சை கொட்டைகளை யாரெல்லாம் சாப்பிட வேண்டும் யாரெல்லாம் சாப்பிட கூடாது என்பது பற்றியும் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ சேப்பங்கிழங்கு சாப்பிடுவாதல் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா..?
மொச்சை கொட்டை நன்மைகள்:
வைட்டமின் E, வைட்டமின் K, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், தைமின் மற்றும் ஜின்க் போன்ற எண்ணற்ற சத்துக்கள் மொச்சை கொட்டையில் இருக்கின்றன.இத்தனை சத்துக்களை கொண்ட இந்த மொச்சை கொட்டையை தினந்தோறும் சாப்பாட்டில் சேர்த்து கொள்ளவில்லை என்றாலும் வாரத்திற்கு ஒரு முறையாவது கட்டாயமாக சாப்பிட வேண்டும். மேலும் மொச்சை எந்த நோய்களுக்கு எல்லாம் மருந்தாக பயன்படுகிறது என்பதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
மலச்சிக்கல் பிரச்சனை தீர:
மொச்சை கொட்டையை நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது செரிமான பிரச்சனை இல்லாமல் நீங்கள் சாப்பிட உணவினை உடனே செரிமானம் ஆகச்செய்து மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.
இதயம் ஆரோக்கியம்:
இந்த மொச்சை கொட்டையில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் போலேட் போன்ற சத்துக்கள் இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. மேலும் இரத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்யாமல் இருப்பதற்கு மொச்சை கொட்டை சிறந்த பலனை தருகிறது.
கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள் |
திசுக்களின் வளர்ச்சி:
இதில் இருக்கும் புரதச்சத்து நமது உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சிக்கு மிகவும் பயனளிக்க கூடியதாக இருக்கிறது.
புற்றுநோய் வராமல் தடுக்க:
இத்தகைய மொச்சை கொட்டை பெருங்குடலில் புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கும் ரசாயனங்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் மார்பக புற்றுநோய் தடுப்பியாகவும் பயன்படுகிறது.
இரத்தச் சிவப்பணு:
உடலில் இரத்தச் சிவப்பணு அணுக்கள் குறைவாக உள்ளவர்கள் மொச்சை கொட்டையை சாப்பிட்டால் நல்லது. ஏனென்றால் மொச்சை கொட்டையில் இரும்புச்சத்து இருப்பதால் இது இரத்தச் சிவப்பணுக்களை அதிகரிக்கவும் மற்றும் உடலின் ஆற்றலை அதிகரிக்க செய்யவும் பயன்படுகிறது.
கருணை கிழங்கை சமையலுக்கு பயன்படுத்தும் முன்பு இதை தெரிந்துக்கொள்ளுங்கள் |
மொச்சை கொட்டை சாப்பிட வேண்டியவர்கள்:
- சர்க்கரை நோயாளிகள்
- கர்ப்பிணி பெண்கள்
- மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள்
- மன அழுத்தம் உள்ளவர்கள்
மொச்சை கொட்டை கூடாதவர்கள்:
- சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள்
- வாதம் உள்ளவர்கள்
மொச்சை கொட்டை நன்மை தரக்கூடியதாக இருந்தாலும் அதனை சரியான அளவில் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது உடம்பிற்கு நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |