Moor Benefits in Tamil
நண்பர்களே உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி தெரிவிக்க வந்திருக்கிறேன். அப்படி என்ன முக்கியமான விஷயம் என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது. உங்களில் அனைவருக்கும் தெரியும் வெயில்காலம் வந்து விட்டால் வெளியில் செல்லவே வேதனையாக இருக்கும்..! வறட்சி அதிகமாக இருக்கும் மேலும் நிறைய பிரச்சனைகள் வந்துகொண்டு தான் இருக்கும். இதற்கு என்ன செய்கிறது.
ரோட்டு ஓரங்களில் நீர் மோர், குளிர்பானங்கள் என நிறைய விற்கும். இது அனைத்திலும் எது நம்முடைய உடலுக்கு நன்மையை அளிக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..! நாம் இன்றைய பதிவின் மூலம் தினமும் 1 டம்ளர் மோர் குடித்தால் என்ன நன்மையை அளிக்கிறது என்பதை தான் பார்க்க போகிறோம்..!
Moor Benefits in Tamil:
வெயில்காலத்தில் மோர் மிகவும் முக்கியமானது. இதில் எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ளது. பாலை காய்ச்சி அதில் இருக்கும் வெண்ணெயை எடுத்த பிறகு தான் அதில் இருக்கும் நீர் தான் நீர் மோர் ஆகும். இதனை தினமும் குடிப்பதன் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க..!
மோர் குடித்தால் உடல் எடை குறையுமா?
புரதம் காணப்படும் பொருட்களில் இந்த நீர்மோர் ஒன்று. இதனுடைய புரத சத்து உடலில் சேரும் போது உடலில் தேவையில்லாத கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. ஆகவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த மோரை தினமும் குடிக்கலாம்.
இரத்த அழுத்தத்தை குறைப்பது எப்படி?
மோரில் பயோ ஆக்டிவ் புரதங்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த சத்துக்கள் உடலில் உள்ள செல்களின் சோடியத்தின் அளவை குறைக்க உதவி செய்யும். மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:
லாக்டிக் அமில பாக்டீரியா ஆன்டிபாடிகளின் உற்பத்தியை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பால் மற்றும் தயிர் இவற்றில் உள்ள நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா
இரத்த போக்கு நிற்க:
மாதவிடாய் காலத்தில் அனைத்து பெண்களுக்கும் நடக்கும் பிரச்சனை இது ஒன்று தான். அது என்னவென்றால் இரத்த போக்கு பிரச்சனை, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு டம்ளர் மோரில் வெந்தயம் போட்டு கலந்து குடுத்தால் வயிறு வலி பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும்.
வயிற்று எரிச்சல் குணமாக:
அதிக வெப்பத்தின் காரணமாக கடினமான உணவு பொருட்களை உட்கொள்வதால் உடலில் அதிக எரிச்சலை ஏற்படுத்தும். ஆகவே அப்போது உடலில் மோருடன், இஞ்சி சேர்த்து குடிக்கலாம்.
இறுகிய மலம் வெளியேற:
மோர் குடிப்பதில் முக்கியமான முதன்மை பண்பு வகிப்பது மலசிக்கல் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பது தான். இந்த மோரில் புரோபயோடிக்ஸ் என்ற பாக்டீரியாக்கள் செரிமான பிரச்சனையை குறைக்கும்.
பச்சையாக தேங்காய் சாப்பிடுவீர்களா அப்படியென்றால் இதை தெரிந்துகொள்ளுங்கள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips In Tamil |