Orange Juice Benefits in Tamil..!
ஹலோ பொதுநலம்.காம் பதிவின் அன்பான நேயர்களே… இன்றைய ஆரோக்கியம் பதிவில் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் நமது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி பார்க்க போகிறோம். ஆரஞ்சு பழத்தில் அதிகம் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலுக்கு எண்ணற்ற பலன்களை தருகிறது. நமது உடலை பாதுகாக்க உதவுகிறது.
இந்த ஆரஞ்சு பழச் சாறை குடித்து வருவதால் உடல்களில் ஏற்படும் நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. அதுபோல இன்று நாம் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க…
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணங்கள்
ஆரஞ்சு ஜூஸ் நன்மைகள்:
ஆரஞ்சு என்றாலே நம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு பழம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதை விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு ஜூஸ் என்றாலே மிகவும் பிடிக்கும். அதிலும் ஆரஞ்சு ஜூஸ் என்றால் பிடிக்காமல் போகுமா..?
ஆரஞ்சு ஜூஸ்-ல் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளது. ஆரஞ்சு ஜூஸ் நமது உடலுக்கு எண்ணற்ற பலன்களை கொடுக்கிறது. இந்த ஆரஞ்சு ஜூஸ் -ல் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் A, பீட்டா கரோட்டீன் மற்றும் இரும்பு சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
ஆரஞ்சு பழத்தில் பெக்டின் எனப்படும் கரையக் கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை நீக்குகிறது.
இதய பிரச்சனைகளை தடுக்க:
ஆரஞ்சு ஜூஸ் அடிக்கடி குடித்து வருவதால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக செல்வதற்கு உதவுகிறது. ஆரஞ்சு ஜுஸில் உள்ள ஹெர்ஸ்பெரிடின் என்ற பொருளானது இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இது இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுக்கிறது. இதய கோளாறுகள் வருவதை தடுக்கிறது. மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும், இது இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
இந்த 5 ஜூஸ் குடித்தால் போதும் கல்லீரல் சுத்தமாகும் |
காயங்களை குணப்படுத்த:
ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் அதில் உள்ள ப்ளோவினோய்டு என்ற பொருளானது நமது உடம்பில் ஏற்படும் காயங்களை குணப்படுத்துகிறது. அல்சர் பிரச்சனையால் குடலில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய உதவுகிறது. மேலும், இது ரத்தசோகை நோய் வராமல் தடுக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
இந்த ஆரஞ்சு ஜூஸில் உள்ள வைட்டமின் C சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் செரிமான மண்டலத்தை சரி செய்ய உதவுகிறது.
சிறுநீரக பிரச்சனை நீங்க:
இந்த ஆரஞ்சு ஜூஸ் தொடர்ந்து குடித்து வருபவர்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கிறது. சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இதை குடித்து வருவதால் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.
வைட்டமின் சி இருப்பதால் இரத்த சோகை பிரச்சனை இருந்தால் அதனை சரி செய்வதற்கு ஆரஞ்சு ஜூஸை குடித்து வாருங்கள். மேலும் புற்றுநோய் செல்களை அழிக்கவும் இந்த ஆரஞ்சு உதவுகிறது.
Orange Juice Benefits in Tamil for Skin:
ஆரோக்கியமான சருமத்தை தர கூடியது ஆரஞ்சு. அதனால் நீங்கள் உங்களின் அன்றாட வாழ்க்கையில் ஆரஞ்சு ஜூஸை தாராளமாக க்டுய்து வரலாம். மேலும் முதுமையான தோற்றத்தை தடுக்க கூடிய வல்லமை படைத்தது இந்த ஆரஞ்சு. இதில் அதிக நார்ச்சத்து அதிக இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |