பாலில் எந்த பொருள் சேர்த்து குடிக்க வேண்டும்..!
வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் அன்பான நேயர்களே… இன்றும் நம் ஆரோக்கியம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். நாம் அன்றாடம் உண்ணும் உணவு பொருட்களில் முக்கியமான ஓன்று தான் பால். பாலில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. அந்த வகையில் பாலில் என்ன பொருள் சேர்த்து குடித்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பாலில் என்ன பொருள் சேர்த்து குடிக்க வேண்டும்:
பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிக்க கூடிய ஒரு பொருள். இந்த பாலில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் B மற்றும் வைட்டமின் D போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது.
மற்ற பொருட்களை காட்டிலும் பாலில் சில ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் அனைவரும் தினமும் 500 மி.லி அளவு பால் கண்டிப்பாக குடிக்க வேண்டும். தினமும் பால் குடிப்பதால் எலும்புகள் வலிமையாக இருக்கும். பாலில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது.
இதையும் பாருங்கள் ⇒ உடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீயின் நன்மைகள்
பாலில் பூண்டு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
- பாலில் பூண்டு சேர்த்து குடிக்கலாம். பாலில் பூண்டு சேர்த்து குடிப்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.
- பாலில் பூண்டு சேர்த்து குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் குணமாகும்.
- முகத்தில் பருக்கள் வருவதை தடுப்பதற்கு பாலில் பூண்டு சேர்த்து குடிக்க வேண்டும்.
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு தினமும் பாலில் பூண்டு சேர்த்து குடிப்பதால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
- நுரையீரல் அழற்சி உள்ளவர்களுக்கு இந்த பூண்டு பால் ஒரு மருந்தாக பயன்படுகிறது.
- குழந்தைகள் தினமும் பூண்டு பால் குடிப்பதால் வயிற்றில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும்.
பாலில் இஞ்சி சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
- தினமும் காலையில் பாலில் இஞ்சி சேர்த்து குடிப்பதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கிறது.
- நுரையீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கும், நுரையீரலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் இந்த இஞ்சி பால் உதவுகிறது.
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி பால் குடித்து வந்தால் பெண்களுக்கு சினைப்பையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கலாம்.
- இந்த இஞ்சி பால் உடம்பில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
- இஞ்சி பால் குடிப்பதால் இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்கிவிடும்.
குறிப்பு: வாய்ப்புண், அல்சர் மற்றும் மூலம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி பால் குடிப்பதை தடுக்க வேண்டும்.
மஞ்சள் பால் நன்மைகள்:
- பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- புற்றுநோய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள்மற்றும் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.
- இந்த மஞ்சள் கலந்த பாலில் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை அதிகம் இருப்பதால் சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
- மஞ்சள் கலந்த பால் தொண்டை கரகரப்பை போக்குகிறது.
- இந்த பால் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
பெருஞ்சீரகம் கலந்த பாலின் நன்மைகள்:
- தினமும் பாலுடன் பெருஞ்சீரகம் சேர்த்து குடித்து வந்தால் எலும்புகள் பலம்பெறும்.
- பற்களில் ஏற்படும் வலி, உணர்ச்சி இன்மை போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
- பெருஞ்சீரகத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் அதை பாலில் சேர்த்து குடிக்கும் போது கண்புரை மற்றும் கண்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது.
- இந்த பால் குடிப்பதால் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வலி ஏற்படாமல் பாதுகாக்கிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |