பீர்க்கங்காய் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள இதை பாருங்கள்..!

Peerkangai Benefits in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் காய்கறி வகைகளில் ஒன்றான பீர்க்கங்காய் நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். ஆனால் நாம் மற்ற காய்கறி வகைகளை சாப்பிடும் அளவிற்கு பீர்க்கங்காயை அதிகமாக உணவில் எடுத்துக்கொள்வது இல்லை. உடல் எடை குறைவிற்கும் மற்றும் செரிமான பிரச்சனைக்கும் பீர்க்கங்காய் சிறந்த மருந்தாக இருக்கிறது. மேலும் பீர்க்கங்காய் நன்மைகள் பற்றி விரிவாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

பீர்க்கங்காய் நன்மைகள்:

peerkingai

 பீர்க்கங்காயில் வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் C, நார்ச்சத்து மற்றும் தாது உப்புகள் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.  

இந்த காயை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் இது உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிக்க செய்து நுரையீரல் பிரச்சனை வராமல் தடுக்கிறது. 

மஞ்சள்காமாலை:

மஞ்சள்காமாலை

மஞ்சள்காமாலை உள்ளவர்கள் பீர்க்கங்காயில் இருந்து 2 ஸ்பூன் சாறு எடுத்து அதனுடன் 1/2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து காலை, மாலை என இரண்டு வேளை குடித்தால் விரைவில் மஞ்சள்காமாலை குணமாகிவிடும். 

உடம்பில் இரத்தக் கட்டு:

இரத்தக் கட்டு

உடலில் எதாவது காயம் இருந்தாலோ அல்லது இரத்தக்கட்டு இருந்தாலோ அந்த இடத்தில் பீர்க்கங்காயின் உட்பகுதியில் இருக்கும் தசையினை எடுத்து ஒரு காட்டன் துணியில் வைத்து கட்டினால் போதும் காயம் சரியாகிவிடும். 

வயிற்றில் புழு:

வயிற்றில் புழு

அதேபோல வயிற்றில் குடற்புழு  உள்ளவர்கள் பீர்க்கங்காயை இரண்டாக வெட்டி அதனுடன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து தண்ணீரை நன்றாக கொதிக்க வைய்யுங்கள். கொதிக்க வைத்த தண்ணீரை காலை, மாலை இரண்டு வேளை குடிக்க வேண்டும்.

அலர்ஜி:

பீர்க்கங்காயின் இலைகளை நன்றாக அலசி விட்டு அதனை பேஸ்ட் போல அரைத்து தோலில் அலர்ஜி ஏற்பட்டு இருக்கும் இடத்தில் போட்டு வந்தால் தோல் நோய் சரியாகிவிடும்.

முடி வளர்ச்சியை அதிகரிக்க:

முடி வளர்ச்சியை அதிகரிக்க

முடி வளர்ச்சி குறைவாக உள்ளவர்கள் பீர்க்கங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைத்து அதற்கு பிறகு பொடியாக அரைத்து விடுங்கள். இப்போது அரைத்த அந்த பவுடருடன் சாதம் வடித்த கஞ்சி கொஞ்சம் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி நீளமாக வளரும் மற்றும் தலையில் வெள்ளை முடி வராது. 

காய்ச்சல்:

காய்ச்சல்

காய்ச்சல் மற்றும் கல்லீரல் வீக்கம் இருப்பவர்கள் பீர்க்கங்காய் சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து இரண்டையும் கலந்து ஒரு வாரம் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்