குப்பையில் போடும் பூண்டு தோலில் இவ்வளவு நன்மைகளா..?

Advertisement

பூண்டு தோல் நன்மைகள் | Poondu Thol Benefits

வணக்கம் நண்பர்களே… இன்று இந்த ஆரோக்கியம் பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி பார்க்கப்போகிறோம். இத்தனை நாளாக நாம் பூண்டு சமைக்கும் போது அதன் தோலை ஒதுக்கி  விடுவோம். ஆனால் பூண்டு தோலில் ஏராளமான மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளது. இது தெரிந்தால் இனி நீங்கள் பூண்டு தோலை தூக்கி போடமாடீர்கள்… வாங்க நண்பர்களே பூண்டு தோலின் நன்மைகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இதையும் பாருங்கள் ⇒ வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்

பூண்டு தோலின் ஆரோக்கிய நன்மைகள்:

நாம் எப்பொழுதும் பூண்டு தோலை உரித்து குப்பையில் போட்டு விடுவோம். ஆனால் இந்த குப்பையில் போடும் பூண்டு தோலில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அது தெரிந்தால் இனிமேல் பூண்டு தோலை நீங்கள் குப்பையில் போடமாட்டீர்கள்…

  • இந்த பூண்டு தோலுக்கு நம்முடைய தலை பாரத்தை போக்கக்கூடிய சக்தியை கொண்டுள்ளது. அடிக்கடி சளி பிடித்தல், தும்மல், தலைவலி அல்லது தலையில் நீர் கோர்த்தல், மூக்கடைப்பு, ஆஸ்துமா போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த பூண்டு தோலை சாம்பிராணி தூபம் போடும் போது அதில் போட்டு அந்த புகையை சுவாசிப்பதால் இது சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை போக்குகிறது.
  • இந்த பூண்டு தோல் தூபத்தை பிறந்த குழந்தைகளுக்கு போடுவதால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க இந்த பூண்டு தோலை பயன்படுத்தலாம்.
  • கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தலைக்கு குளித்த உடனே தலையில் நீர்கோர்த்து விடும். அதனால் அவர்களுக்கு சளி பிரச்சனை உண்டாகிறது. அந்த பிரச்சனை குழந்தைக்கும் ஏற்பட்டு விடும். அவ்வாறு நடக்காமல் இருக்க இந்த பூண்டு தோல் தூபத்தை போடுவதால் அது நல்ல பலனை அளிக்கிறது.
  • ஒரு காட்டன் துணியில் இந்த பூண்டு தோலை வைத்து நன்றாக முடிந்து கொள்ளவேண்டும். பின் அதை உங்கள் தலையணைக்கு பதிலாக தலைக்கு வைத்து தூங்கலாம். அப்படி தூங்கும் போது அந்த பூண்டு தோல் தலையணையில் இருந்து வரக்கூடிய வாசனையை நீங்கள் சுவாசிப்பதால் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் முழுவதுமாக நீங்கிவிடும்.
  • அதேபோல் இந்த பூண்டு தோல் தலையணையை நீங்கள் உட்காரும் இடத்தில் வைத்து அதன் மேல் உட்காந்து வருவதால் உடல் சூட்டை தணிக்கிறது. நீர்க் கடுப்பு பிரச்சனை உள்ளவர்கள் இந்த பூண்டு தோல் தலையணையில் உட்காந்து வருவதால் நல்ல பலன் கிடைக்கிறது.

குறிப்பு: இந்த பூண்டு தோலை பிளாஸ்டிக் பையில் முடிந்து  தலைக்கு வைத்து படுக்க கூடாது. துணி பையை தான் பயன்படுத்த வேண்டும். 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement