புரத உணவுகள் | Protein Rich Food in Tamil List
வணக்கம் நண்பர்களே பொதுவாக உடலுக்கு தேவையான சத்துக்கள் வைட்டமின் சத்துக்கள் எவ்வளவு உள்ளதோ அதே போல் உடலுக்கு தேவையான புரத சத்துக்களும் அதிகம் தேவைப்படும். சிலர் அதிகம் வைட்டமின் நிறைந்த சத்துக்கள் உணவுகளை சாப்பிடுவார்கள். அதனை மட்டும் சாப்பிடுவதால் அதன் மூலம் சில குறைபாடுகள் வரும் ஆதனால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சமமாக சேர்த்துக்கொண்டால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து நலமாக வாழவீர்கள்.
புரத சத்து அதிகம் உள்ள உணவுகள்:
வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள் |
முட்டை பயன்கள்:
- முட்டை அதிகம் உணவில் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைத்து நல்ல உடலமைப்பை தரும் தசைகளை வலுப்படுத்தும் இளமையான தோற்றத்தை தரும். முட்டையின் வெள்ளைக்கருவில் புரத சத்துக்கள் அதிகம் உள்ளது அதுமட்டுமில்லமால் மஞ்சள் கருவில் ஒமேகா சத்துக்கள் அதிகம் உள்ளது அதனால் இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் புரத சத்துக்கள் அதிகம் உடலுக்கு கிடைக்கும்.
பருப்பு பயன்கள்:
- அசைவ உணவு பிடிக்காதவர்கள் முக்கியமாக பருப்பு வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அசைவு சாப்பிடாதவர்கள் அதில் நிறைந்துள்ள சத்துக்களை இந்த பருப்பு வகையின் மூலம் உடலுக்கு செலுத்தலாம். பருப்பு வகைகள் என்றால் சோயா பீன்ஸ், பட்டாணி போன்ற பருப்புகளை சேர்த்து சாப்பிடுங்கள் உடலுக்கு தேவையான புரத சத்துக்களை தரும்.
புரதம் நிறைந்த அசைவ உணவுகள்:
- பொதுவாக மருத்துவர்கள் புரதம் நிறைந்த மீன் சாப்பிடுங்கள் என்று சொல்வார்கள். அதிகமாக மீன்களில் தான் புரதம் அதிகம் உள்ளது அதனால் மருத்துவர்கள் அதனை சாப்பிட சொல்வார்கள். அது மட்டுமில்லாமல் மீன்களில் அதிகம் காலோரிகள் மற்றும் கொழுப்பு சத்துக்கள் உள்ளது.
- அடுத்தது கோழிக்கறி சாப்பிட சொல்வார்கள் அதிலும் புரத சத்துக்கள் அதிகம் உள்ளது. அனைத்து அசைவ உணவுகளிலும் புரதம் என்பது அதிகம் காணப்படும். முக்கியமாக மீன், கோழி கறிகளில் மட்டும் தான் அதிகளவு புரத சத்துக்கள் உள்ளது.
நட்ஸ் பயன்கள்:
- நட்ஸ் வகைகள் புரதத்தில் மட்டுமில்லாமல் அதிகம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்த உணவுகள். இதில் தினசரி 2 சாப்பிட்டு வந்தால் போதும். இதில் உள்ள கொழுப்பு சத்துக்கள் புரத சத்துக்கள். ஒமேகா 3 சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடலுக்கு தேவையான புரத சத்துக்களை உடலுக்கு தருகிறது.
வைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள் |
பிரக்கோலி நன்மைகள்:
- பிரக்கோலி புரத சத்துக்களில் உள்ள தாவர வகைகளை சார்ந்தது. இதில் 9 அமிலங்களை கொண்டுள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் அடங்கியுள்ளதால் இதனை சாப்பிட்டால் வயிறு நிரம்பி உள்ளது போல் இருக்கும். அது மட்டும் இல்லாமல் பிரக்கோலியில் புரத சத்துக்கள் அதிகம் இருப்பதால் இதனை தொடந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான புரத சத்துக்கள் கிடைக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |