புதினா இலையை யார் யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா..?

Advertisement

புதினா பற்றிய தகவல்

அனைவருடைய வீட்டிலும் சமைக்கும் போது கறிவேப்பிலை, புதினா மற்றும் கொத்தமல்லி உபயோகப்படுத்துவது இயல்பான ஒன்று. அத்தகைய புதினாவில் நிறைய மருத்துவ குணகங்கள் நிறைந்து இருக்கின்றன. இந்த புதினாவில் ஒரு தனித்துவமான நறுமணம் இருக்கும். நாம் சமையலுக்கு பயன்படுத்தும் இந்த புதினாவில் நமக்கு தெரியாத விஷயங்கள் இருக்கின்றன. மேலும் புதினாவை யார் யார் எல்லாம் சாப்பிட கூடாது என்பது பற்றியும் இன்றைய பதிவில் விரிவாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள்

புதினாவில் உள்ள சத்துக்கள்:

தினமும் பயன்படுத்தும் ஒரு கொத்து புதினா இலையில் உள்ள 16 வகையான சத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. வைட்டமின் A
  2. வைட்டமின் B1
  3. வைட்டமின் B2
  4. வைட்டமின் B3
  5. வைட்டமின் B6
  6. வைட்டமின் B9
  7. வைட்டமின் C 
  8. கால்சியம் 
  9. மெக்னீசியம் 
  10. புரதம் 
  11. இரும்புச்சத்து 
  12. பொட்டாசியம் 
  13. கார்போஹட்ரேட் 
  14. கொழுப்புச்சத்து 
  15. நார்ச்சத்து 
  16. கலோரிகள்

Pudina Ilai Benefits in Tamil:

புதினாவின் பயன்கள்

புதினாவிற்கு இயற்கையாகவே ஜீரண சக்தி இருப்பதால் இதனை நாம் தினமும் உணவில் சேர்த்து கொள்ளும் போது செரிமான கோளாறு மற்றும் மலம் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் ஆகியவற்றைக்கு புதினா சிறந்த மருந்தாக பயன்படுகிறது. 

இந்த புதினா இலையில் இருந்து தயாரிக்கும் எண்ணெயை நமது உடம்பில் வலி இருக்கும் இடத்தில் அப்ளை செய்து வந்தால் உடல் வலி நீங்கி விடும். அதுபோல இந்த எண்ணெயை ஆல்கஹால் தயாரிக்கும் போது சிறிதளவு பயன்படுத்துகின்றனர்.

புதினா குளிர்ச்சி தன்மையை கொண்டுள்ளது. அதனால் நமது வாய் பகுதிகளில் எதாவது துறுநாற்றம் வீசும் போது புதினாவை வாயில் போட்டு மென்றால் வாய்த்துறுநாற்றம் நீங்கி விடும். 

இத்தனை நன்மைகள் கொண்ட புதினாவில் இருந்து புதினா மாத்திரைகளும் தயாரிக்க படுகின்றன.

தலை வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கும் புதினா நன்மையை தருகிறது.

பாகற்காயை சாப்பிடுவதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

புதினாவின் தீமைகள்:

புதினாவின் தீமைகள்

புதினா இலை மாத்திரைகளை குடலிறக்கம் மற்றும் பித்தப்பை அடைப்பு உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்த்த கொள்ள வேண்டும்.

அதேபோல புதினா எண்ணெயை நம்முடைய சருமத்திற்கு பயன்படுத்த கூடாது. ஏனென்றால் சருமத்தில் அரிச்சல் மற்றும் தடிப்பு போன்ற பிரச்சனைகள் வரும்.

புதினாவால் தயாரிக்கப்பட்ட எண்ணெயை குடிக்க கூடாது. ஏனென்றால் அது உடலுக்கு விஷமாக மாறக்கூடிய தன்மையும் இருக்கிறது.

புதினவை சாப்பிட வேண்டியவர்கள்:

  • செரிமான பிரச்சனை உள்ளவர்கள்
  • தலைவலி உள்ளவர்கள்
  • உடம்பு வலி
  • வாய்த்துறுநாற்றம் உள்ளவர்கள்

புதினாவில் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும் ஒரு நாளைக்கு  90 மில்லி கிராம் முதல் 120 மில்லி கிராம் வரை மட்டுமே சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது.

புதினா சாப்பிடாகூடாதவர்கள்:

  • கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்
  • குடலிறக்கம் உள்ளவர்கள்
  • கர்ப்பிணி பெண்கள்
  • குழந்தைகள்

மேலே சொல்லப்பட்டுள்ள நபர்கள் புதினா எண்ணெய் மற்றும் மாத்திரை எதுவாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை படி சாப்பிடுவது நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement