பேரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Sabarjilli Fruit Benefits in Tamil

பொதுவாக குழந்தைகள் பழம் சாப்பிட மறுப்பார்கள். அப்போது குழந்தையிடம் சொல்லும் ஒரு வார்த்தை பழத்தில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா.? என்று சொல்லி சொல்லியே எப்படியாவது பழத்தை சாப்பிட வைத்து விடுவார்கள். அத்தகைய நன்மைகள் நிறைந்த பழங்களில் ஒன்றை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். அப்படி நமக்கு தெரியாத பழம் என்னவென்று யோசிக்கிறீர்களா. ரொம்ப யோசிக்காதிர்கள் அந்த பழம் பேரிக்காய் தான்.

பேரிக்காயை அவ்வளவாக யாரும் சாப்பிட மாட்டார்கள். எப்போதாவது ஒன்று அல்லது இரண்டு முறை தான் சாப்பிடுவார்கள். ஆனால் நமக்கு தெரியாத எண்ணற்ற மருத்துவ குணங்கள் பேரிக்காயில் இருக்கிறது. சரி அத்தகைய நன்மைகள் பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

பேரிக்காய் நன்மைகள்:

பேரிக்காய்

பேரிக்காய் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் கிடைக்கிறது. நாம் ஆப்பிள் சாப்பிடுவதில் இருக்கும் நன்மைகளை விட பேரிக்காயில் அதிக நன்மை இருக்கிறது.

 பேரிக்காயில் புரதம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் A மற்றும் வைட்டமின் B போன்ற அனைத்து சத்துக்களும் இருக்கிறது. 

சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு:

சிறுநீரக பிரச்சனை

 

பேரிக்காயில் நீர்ச்சத்து அதிகாமாக இருப்பதால் இது சீறுநீரக பிரச்சனைக்கு மிகசிறந்த மருந்தாக பயன்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் உடலில் இருக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்றி உடலை ஆரோக்கியாமாக வைக்க உதவுகிறது.

வளரும் குழந்தைகள்:

வளரும் குழந்தைகள்

இந்த காயில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் அதிகமாக இருப்பதால் இதை வளரும் குழந்தைகள் சாப்பிட்டால் தசை வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி போன்றவற்றைக்கு மிகவும் உதவியானதாக இருக்கும்.

அதுபோல இரவு தூங்குவதற்கு முன்பு தினமும் 1 பேரிக்காய் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்தால் இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு பயனளிக்க கூடியதாக இருக்கும். 

இதய ஆரோக்கியம்:

இதய ஆரோக்கியம்

இதயம் பலவீனமானவர்கள் மற்றும்  இதயம் படபடப்பு உள்ளவர்கள் தினமும் 1 பேரிக்காயை தோலுடன் சாப்பிட்டால் அது இதயத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடியதாகும்.

தாய்ப்பால் சுரக்க:

பெண்கள்

குழந்தை பெற்றடுத்த தாய்மார்கள் பேரிக்காயை காலை, மாலை என இரண்டு வேலையும் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும் மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும். 

சர்க்கரை நோய் குறைய:

சர்க்கரை நோய் குறைய

பேரிக்காயை நாம் சாப்பிடும் போது அதில் இருக்கும் நார்ச்சத்து நமது உடலுக்கு சர்க்கரை நோய் வருவதை தடுக்கிறது. 

அதுபோல மலச்சிக்கல், குடல் புண், உடல் சூடு, உடல் சோர்வு மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றைக்கு பேரிக்காய் நல்ல பலன்களை தருகிறது. 

இதையும் படியுங்கள்⇒ தினமும் பால் குடிப்பவர்களுக்கு முக்கியமான தகவல்..! கண்டிப்பா தெரிந்துகொள்ளுங்கள்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement