சங்கு பூ டீ பயன்கள்
வணக்கம் நண்பர்களே இன்றைய ஆரோக்கிய பதிவில் சங்குப் பூ தேநீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாக நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பல வகையான மூலிகை தேநீர்களை குடித்திருப்போம், எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால், லெமன் டீ, புதினா டீ, இஞ்சி டீ, சுக்கு டீ , மிளகு டீ போன்ற தேநீர் வகைகளை குடித்திருப்போம் அல்லவா, ஆனால் சங்குப் பூ டீ குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன, மேலும் அதை பற்றிய முழு விவரங்களையும் நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.
உடல் எடையை குறைக்க ரோஜா பூ தேநீர் |
சங்குப் பூ என்றால் என்ன.?
சங்குப் பூ ஆனது பல வேலிகளில் படரும் ஒரு கொடி வகையாகும், இவை இரண்டு வகையான நிறத்தில் பூக்களை கொண்டுள்ளது, ஒன்று வெள்ளை நிறம், மற்றொன்று நீலம் நிறமாகும். இந்த சங்குப் பூவின் உண்மையான பெயர் “கருவிளை மலர்” ஆகும், ஆனால் இந்த சங்குப் பூ ஆனது பார்ப்பதற்கு சங்கு வடிவில் தோற்றத்தை கொண்டதால், சங்குப் பூ என்று அழைக்கப்பட்டது. மேலும் இந்த சங்குப் பூவானது காக்கரட்டான், கன்னிக் கொடி, புஷ்பம், காக்கணம், மாமூலி போன்ற பெயர்களையும் கொண்டுள்ளது. மேலும் இந்த பூக்களை தேநீராக குடிப்பதினால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்வோம்.
சங்குப்பூ தேநீர் நன்மைகள் | Sangu Poo Tea Benefits in Tamil:
சங்குப்பூ ஆனது தானாகவே வேலிகள் போன்ற இடங்களில் கொடியாக பரவக்கூடிய தாவர வகையாகும், இவை பொதுவாக மருத்துவங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பூக்கள் மட்டுமின்றி, அதனுடைய இலை, விதை, வேர் போன்ற அனைத்தும் பல மருத்துவங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சங்குப் பூக்களை பயன்படுத்தி செய்யக்கூடிய தேநீர் ஆனது உடலின் ஆரோக்கியத்தையும், முகத்தின் அழகையும் மேம்படுத்துவதற்காக அதிகமாக உதவிபுரிகிறது. உங்களுடைய முகத்தின் அழகை மேம்ப்படுத்த வேண்டும் என்று நினைத்தால், நீங்களும் இதை தினமும் குடித்து வரலாம். மேலும் இவை எந்தெந்த நோய்களை குணப்படுத்துகிறது என்று தெரிந்துகொள்வோம்.
சங்குப்பூவில் “ஆன்டி டையபெட்டிக்“ அதிகமாக நிறைந்துள்ளதால், இவற்றை தேநீர் செய்து குடிக்கும் பொழுது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவியாக இருக்கின்றது. மேலும் இவை மன கவலையை போக்குவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
இந்த சங்குப் பூவில் நிறைந்துள்ள Anthocyanin என்று சொல்ல கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக நிறைந்துள்ளதால், இவை கண்களில் இருக்கும் சிவப்பணுக்களை பாதிக்காமல் இருப்பதற்கும், குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் கண் பார்வைகளை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருக்கின்றது.
சங்குப்பூ தேநீரை தினமும் குடித்து வந்தால், மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது, மேலும் இவை மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி மூளையின் செயல் திறனை அதிகரிக்கவும் பயனுள்ளதாக இருக்கின்றது. வயது அதிகரிப்பதினால் சிலருக்கு ஏற்படும் நியாபக மறதியை, அதிகரிப்பதற்காகவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
எடையை குறைக்க உதவும் லெமன் காபி |
சங்குப் பூ தேநீர் குடிப்பதால் தடுக்கப்படும் பிரச்சனைகள்:
- உடல் எடையயை குறைப்பதற்கு உதவியாக இருக்கின்றது.
- இருதயம் சம்மந்தப்பட்ட எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் உதவியாக இருக்கின்றது.
- செரிமான உறுப்பு சுத்தமாக வைப்பதற்கும், செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளை தடுப்பதற்கு பயனுள்ளதாக இருக்கின்றது.
- வயிற்றில் வளர கூடிய குடல் புழுக்களை அகற்றுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
- கடினமான வேலைகளை செய்வதினால் ஏற்படும் உடல் சம்பந்தப்பட்ட எல்லா விதமான வலிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கின்றது.
- பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் ஏற்படும், அதிகமான இரத்த போக்கு, வெள்ளை படுத்தல், போன்ற மாதவிடாய் சம்மந்தப்பட்ட எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கின்றது.
- சருமத்தில் ஏற்படும், பருக்கள், அரிப்பு, அலர்ஜி போன்றவற்றை சரி செய்வதற்கும், தலை முடி பிரச்சனைகளான பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு உதவியாக இருக்கின்றது.
லெமன் டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in tamil |