கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துகொள்ள வேண்டும்..!

Advertisement

கர்ப்பப்பை ஆரோக்கியம்

பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு என்றால் அது கர்ப்பப்பை தான். அதுமட்டும் இல்லாமல் இத்தகைய கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். இப்படி ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமான கர்ப்பப்பையை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆகாயல் கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்க பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்று தெரிந்துக்கொண்டு இனியாவது அதனை பின்பற்றலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ நுரையீரல் பலமாக இருக்க இந்த உணவுகளை கட்டாயம் எடுத்து கொள்ளவும்

Foods to Eat For a Healthy Uterus:

கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் சாப்பிடும் சாப்பாட்டில் சில உணவினை மட்டும் சேர்த்து கொண்டால் போதும். அது என்னென்ன உணவுகள் என்று தெரிந்துக்கொள்வோம் வாங்க.

கீரை வகைகள்: 

utreus helath in tamil

கீரை வகைகளான முருங்கை கீரை, தண்டு கீரை இந்த இரண்டினையும் சாப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் முட்டை கோஸினையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இவை மூன்றிலும் உள்ள சத்துக்கள் மற்றும் ஃபோலிக் அமிலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினையும் மற்றும் ஆற்றலையும் அளிக்கிறது. அதனால் இதனை சாப்பாட்டுடன் சேர்த்து எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது.

உலர் உணவுப் பொருட்கள்:

 கர்ப்பப்பை ஆரோக்கியம்

உலர் உணவு பொருட்களான முந்திரி, திராட்சை, பிஸ்தா மற்றும் வால்நெட் போன்ற அனைத்தும் அடங்கும். இவை அனைத்திலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது.

 அதனால் இதனை பெண்கள் சாப்பிடும் போதும் கருப்பையினை சுற்றி கட்டிகள் வராமலும் மற்றும் கர்ப்பப்பையில் புற்றுநோய் எதுவும் வராமலும் பாதுகாத்து கருப்பையிக்கு தேவையான ஊட்டச்சத்தினை மட்டும் அளித்து ஆரோக்கியமாக வாழ செய்கிறது.  
நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருக்க இந்த 5 விஷயத்தை கடைபிடிக்கவும்..!

எலுமிச்சை பழம்:

 foods to eat for a healthy uterus in tamil

நாம் நமது வீட்டில் அடிக்கடி உபயோகப்படுத்தும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் C, மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் சோடியம் போன்றவற்றை நிறைந்து இருக்கிறது.

ஆனால் இதில் உள்ள வைட்டமின் C கர்ப்பையின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்து அவற்றை பாதுகாத்து ஆரோக்கியமாக இருக்க செய்கிறது.

பழங்கள்:

healthy uterus for food in tamil

தினமும் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் இருக்கும் சத்தினை விட பழங்களில் தான் அதிகமான சத்துக்கள் இருக்கிறது. அதனால் தினமும் உணவு இடைவேளையின் போது பழங்களை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் C மற்றும் ஃபிளாவனாய்டுகள் கருப்பையில் நீர்க்கட்டிகள் எதுவும் வராமல் தடுக்கிறது. 

தானியங்கள்:

தானியங்கள்

தானியங்களில் இருக்கும் நார்ச்சத்து அது கருப்பையில் நார்த்திசுக்கட்டி போன்று எதுவும் வராமல் இருக்க செய்யவும் மற்றும் பெண்களுடைய உடலில் இருக்கும் அதிக அளவிலான ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றம் செய்தும் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும் இருக்க செய்து பெண்களை நலமாக வாழ உதவி புரிகிறது.

இதையும் படியுங்கள்⇒ உங்கள் கிட்னியை பாதுகாக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil
Advertisement