வாழைப்பழத் தோலின் பயன்கள்
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் வாழைப்பழத்தோலின் நன்மைகளை பற்றிதெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக வாழைப்பழம் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் நாம் ஒவ்வொரு முறையும் வாழைப்பழம் சாப்பிட்டால் பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறிந்துவிடுவீர்கள். இனி அதனை யாரும் வாழைப்பழத்தோலை தூக்கி எறியமாட்டீர்கள். வாங்க இப்போது வாழைப்பழத்தோலின் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம்..!
வாழைப்பழத் தோலின் பயன்கள்:
வாழைபழத்தோலில் ஏராளமான நன்மைகள் உள்ளது அதில் மிகவும் முக்கியானது அதனை பற்றி பார்ப்போம்.. வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எரியாமல் அதனை கால்களில் ஏதேனும் முள் குத்திவிட்டால் அதனை வெளியே எடுக்கமுடியாமல் கஷ்டப்படுபவர்கள் அந்த முள்கள் உள்ள இடத்தை சுற்றி வாழைப்பழத்தோலை தடவி வரவும். அதன் பின் அதனை சுற்றி அழுத்திவிட்டால் வெளியில் வரும்.
அதுமட்டுமில்லாமல் சொரியாசிஸ் போன்ற சர்ம பிரச்சனைக்கு இந்த வாழைப்பழத்தோல் உதவியாக இருக்கும். சொரியாசிஸ் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் அது நல்ல பலன்களை தரும்.
தோல் சிவந்து தடிப்பு காணப்படும் இடத்தில் அதனை தடவி வந்தால் விரைவில் குணமாகும். அதுமட்டுமில்லாமல் அரிப்பும் நீங்கிவிடும்.
உடலில் பெரிய அளவில் மச்சம் அல்லது மருக்கள் இருக்கும் அது முகத்தில் உள்ள சர்ம அழகை கெடுக்கும் ஆகையால் மருக்கள் இருக்கும் இடத்தை சுற்றி அதனை ஒரு இரவு முழுவதும் வைத்து வந்தால் அது கூடிய விரைவில் நீங்கிவிடும்.
சிலருக்கு தீடிர்னு உடலில் அலர்ஜி ஏற்பட்டு உடல் முழுவதும் தடிப்புகள் ஏற்படும் அப்போது அதில் வாழைப்பழத்தோலை தடவி வந்தால் அலர்ஜி குறைந்து விடும். அதுமட்டுமில்லாமல் தோலை பிரிட்ஜியில் வைத்து அதனை தடவி வந்தால் அரிப்பும் நீங்கும் தடிப்பும் நீங்கும்.
பற்கள் மஞ்சளாக இருக்கும் போது இந்த வாழைப்பழத்தோலை பற்களில் காலையில் தடவி வந்தால் மஞ்சள் நிறம் மாறி வெண்மையாக இருக்கும்.
சருமத்தின் உள்ள சுருக்கத்தை போக்க வாழைப்பழத்தோலை அரைத்து அதன் கூடவே முட்டையில் உள்ள மஞ்சள் கருவை சேர்த்து இரண்டையடையும் அரைத்து அதனை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம் மறையும்.
தினமும் அதிகம் தலை வலி உள்ளவர்களுக்கு வாழைப்பழத்தோலை தலையில் 20 நிமிடம் வைத்தால் தலை வலி மறைந்துவிடும்.
முக்கியமாக பச்சை வாழைப்பழத்தோலை சாப்பிட்டுவதால் அது உடலில் ரத்த அணுக்களை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றன.
தோலை சாப்பிட்டுவந்தால் உடலில் உள்ள பெருங்குடலை சுத்தப்படுத்தி மலச்சிக்கலிருந்து விடுபட உதவிகின்றன. அதுமட்டுமில்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
இரவில் வாழை பழம் சாப்பிடுபவர்கள் தோலையும் சாப்பிடுவது நல்லது ஏனென்றால் இரவு நேரங்களின் தூக்கம் இல்லாமல் தவிக்கும் அனைவருக்கும் இது ஒரு நல்ல மருந்தாக இருக்கும் நன்கு தூக்கம் வரும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |