தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

Advertisement

வெள்ளைபூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Venpoosani Juice Benefits in Tamil

வணக்கம் நண்பர்களே. பொதுநலம்.காமின் இனிமையான நேயர்களே. இன்று நம் ஆரோக்கியம் பதிவில் எதை பற்றி பார்க்கப்போகிறோம் என்று தானே யோசிக்கிறீர்கள். அனைவருக்கும் பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அப்படி என்ன தகவல் என்று கேட்பீர்கள். நாம் இன்று வெண்பூசணி சாறு குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ளப்போகிறோம்.

வெண்பூசணியில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது. வெண்பூசணியை நாம் உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும். வெண்பூசணியை சமைத்து சாப்பிட பிடிக்காதவரக்ள் வெள்ளைபூசணி சாறு செய்து குடித்து வரலாம். பிப்டி வெள்ளைபூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

வெண்பூசணிக்காய் பயன்கள்: 

venpoosani

வெண்பூசணி காய் ஆங்கிலத்தில் Ash Gourd என்று கூறுகிறார்கள். காய்கறி வகைகளிலேயே பிராண சக்தி அதிகம் கொண்ட காய் வெண்பூசணி. எதிர்மறையான எண்ணங்களை தகர்த்து நேர்மறையான எண்ணங்களை கொடுக்கக்கூடிய காய் என்பதால் வெண்பூசணியை திருஷ்டி காயாக பயன்படுத்துகிறோம். ஆனால் வெண்பூசணியில் இருக்கும் சத்துக்கள் ஏராளம். என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்ப்போம்.

  • இதில் நீர்ச்சத்து மற்றும் நார்சத்து அதிகம் உள்ளது.
  • வெண்பூசணியில் வைட்டமின் C மற்றும் வைட்டமின் B சத்துக்கள் அடங்கியுள்ளன.
  • கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற வளமான சத்துக்கள் இந்த வெண்பூசணியில் அடங்கியுள்ளன.
  • பூசணிக்காயில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இது உடல் எடையை குறைப்பதற்கு அதிகம் பயன்படுகிறது.
  • உடலில் ஏற்படும் புண்களை ஆற்றுவதற்கும் தழும்புகளை மறைய செய்வதற்கும் பூசணிக்காய் பயன்படுகிறது.
  • அடிக்கடி பூசணிக்காய் உணவில் சேர்த்துக்கொள்வதால் கண்பார்வை சிறப்பாக இருக்கும். இது நோய்எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கிறது.
கற்றாழை ஜூஸ் பூண்டு சாறு கலந்து குடித்தால் இந்த 8 விஷயமும் நடக்கும்

வெள்ளை பூசணி ஜூஸ் பயன்கள் | venpoosani saru benefits in tamil:

venpoosani juice

  • வெண்பூசணி சாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது.
  • இந்த வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் குடலில் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருக்கக்கூடிய உணவு கழிவுகளை உறிஞ்சி வெளியேற்றுகிறது.
  • இது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை தூண்டி ரத்தத்தில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றுகிறது.
  • இந்த ஜூஸ் குடிப்பதால் செரிமான கோளாறுகள் வருவதை தடுக்கிறது.
  • வெண்பூசணி காரத்தன்மை அதிகம் கொண்ட காய் என்பதனால் இது வயிற்றில் இருக்ககூடிய செரிமான அமிலத்தின் pH அளவை சமநிலைப்படுத்துகிறது.
  • இந்த ஜூஸ் குடிப்பதால் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகிறது.
  • அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு கோளாறுகளை தடுக்கிறது.
  • காலையில் வெறும் வயிற்றில் இதை குடிப்பதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
  • ஞாபகசக்தி அதிகரிக்கிறது.
  • இதில் உள்ள வைட்டமின் சத்துக்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
  • குழந்தைகள் இந்த ஜூஸ் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர அவர்களின் ஞாபகசக்தி பலமடங்காக அதிகரிக்கிறது.
  • வயிற்று புண்கள் என்று சொல்லக்கூடிய அல்சர் பிரச்சனைகளுக்கு மிகசிறந்த பானமாக வெண்பூசணி சாறு பயன்படுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அல்சரை குணமாக்கும் என மருத்துவ ஆய்வுகளில் கூறுகின்றனர்.
கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • இதனை தினமும் குடித்து வர நோய்எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் பல்வேறு தோற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
  • இந்த ஜூஸ் குடிப்பதால் புற்றுநோய் கட்டிகள் வளர்வதை தடுத்து நிறுத்துவதோடு புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.
  • இது உடலில் எலக்ட்ரோலைட்ஸ் அளவை சீராக வைப்பதோடு உடல் சூட்டை தனித்து உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது.
  • சுவாச மண்டலத்தை பலப்படுத்தும் ஆற்றல் இந்த வெண்பூசணி சாற்றில் அதிகம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் நுரையீரலை எளிதாக பாதிக்கக்கூடிய சளிக் கழிவுகளை வெளியேற்றி நுரையீரலை சுத்தப்படுத்துகிறது. இதன் மூலம் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

குறிப்பு: என்ன நண்பர்களே இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய இந்த காயை திருஷ்டி காயாக பயன்படுத்தாமல் உணவு பொருளாக பயன்படுத்துங்கள். 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement