உடல் குறைய என்ன செய்ய வேண்டும் | Water Diet For Weight Loss in Tamil
உடல் எடையை வைத்து கிண்டல் செய்யாதவர்கள் யாரும் இருப்பதில்லை. விளையாட்டுக்காக என்றும் சொல்லி விட்டு கிண்டல் செய்வது மனிதர்களின் வழக்கமாக உள்ளது. என்னதான் செய்வது என்று சிலர் கேட்பார்கள். சிலர் நான் என்ன செய்தாலும் உடல் எடை குறைவதில்லை. சரி 10 நாட்களில் மிகவும் எளிமையாக எடை குறைப்பது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..!
Water Diet For Weight Loss in Tamil:
1 நாள்:
நம்முடைய உடலுக்கு முக்கியமான ஒன்று நீர் சத்து தான். எனவே நாம் தினமும் நீர் சத்துள்ள பொருட்களை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய தொடங்கும்.
முதல் நாள் தண்ணீர் மட்டும் தான் குடிக்கவேண்டும். முடிந்தளவுக்கு தண்ணீர் மட்டும் குடியுங்கள். அதிகபட்சமாக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை உங்களால் முடிந்த அளவிற்கு தண்ணீர் குடியுங்கள். ரொம்ப பசித்தது என்றால் பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் மா, பலா, வாழை தவிர எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
உடல் எடை குறைய வேண்டுமா? அப்போ இதை TRY பண்ணுங்க..!
2 நாள்:
முதல் நாள் இரவே தண்ணீரில் புதினா அல்லது துளசி சேர்த்து ஊறவைக்கவும். அந்த தண்ணீரை மறுநாள் காலையில் அதாவது 2 ஆம் நாள் தண்ணீர் தாகம் எடுக்கும் போது குடிக்கவும். இரண்டாவது நாளே உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற ஆரம்பம் ஆகும். அப்போது நீங்கள் சத்துக்கள் இல்லாமல் இருப்பீர்கள். அப்போது பழங்கள் சாப்பிடலாம் மேல் குறிப்பிட்டது போல்.
3 நாள்:
தண்ணீர் தான் குடிக்கவேண்டும். ஆனால் அதில் வெள்ளம் அல்லது கருப்பட்டி தண்ணீரை தான் குடிக்கவேண்டும். அந்த நாள் முழுவதும் தண்ணீருக்கு பதிலாக இதை மட்டும் குடிக்கவேண்டும். ரொம்ப பசியாக இருந்தால் க்ரீன் டீ, சுக்கு டீ, மிளகு டீ, பால், சர்க்கரை, சேர்க்காமல் குடிக்கலாம்.
4 நாள்:
நான்காம் நாள் உடலுக்கு புரத சத்துக்கள் தேவைபடும். அதனால் நாம் அன்று சூப் குடிக்கவேண்டும். அது அசைவம் மற்றும் சைவமும் சாப்பிடலாம். இருந்தாலும் தண்ணீரும் குடித்து கொள்வது நல்லது.
5 நாள்:
ஐந்தாம் நாள் குடிக்கின்ற தண்ணீரில் 1 பிஞ் அளவு உப்பு, சர்க்கரை அல்லது பண வெல்லம் கலந்து குடிக்கவேண்டும். கண்டிப்பாக 2 லிட்டருக்கு மேல் இந்த தண்ணீரை குடித்து கொள்ளவேண்டும். அதனையும் மீறி பசித்தால் மேல் சொல்லிய படி பழங்கள் சாப்பிடலாம்.
உடல் எடை குறைய பீன்ஸ் சாப்பிடுங்க..!
6 நாள்:
ஆறாவது நாள் முடிந்த Fresh Juice குடிக்கவேண்டும். அதுவும் சுகர் சேர்க்காமல் குடிக்கவேண்டும். அதேபோல் தண்ணீரும் குடிக்கவேண்டும்.
7 நாள்:
ஏழாவது நாள் காலையில் தண்ணீர் குடித்துவிட்டு காலை உணவிற்கு அரை மூடி தேங்காய் மற்றும் சுடு தண்ணீர் எடுத்து கொள்ளளவும். உங்களால் குடிக்கின்ற சூட்டில் இருந்தால் போதுமானது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும்.
8 நாள்:
எட்டாவது நாள் புதினா இல்லையென்றால் துளசி கலந்த தண்ணீர் குடிக்கவேண்டும். சர்க்கரை பால் இல்லாத கிரீன் டீ அல்லது இஞ்சி டீ குடிக்கலாம்.
9 நாள்:
உடலில் உள்ள அனைத்து கெட்ட கொழுப்புகளும் குறைய தொடங்கியதால் வலிமை இழந்தது போல் காணப்படுவீர்கள். ஆகவே பசிக்கும் போது பழங்கள் சாப்பிடலாம். அதன் கூடவே சுடு தண்ணீரும் எடுத்துகொள்ளவும்.
10 நாள்:
10 ஆம் நாளில் சிட்ரிக் பழத்தின் ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். உதாரணத்திற்கு எலுமிச்சை ஜூஸ் ஆரஞ்சு ஜூஸ் எடுத்து கொள்ளவும். இதனை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வருவதன் மூலம் நல்ல மாற்றம் ஏற்படும். உடலுக்கு புதிய புத்துணர்ச்சி கிடைக்கும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 ஓரே வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறைய டிப்ஸ்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |