உடல் எடை குறைய உணவு முறை | Weight Loss Tips at Home in Tamil
7 kg Weight Loss in 7 Days in Tamil: உடல் எடை அதிகமாக இருப்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்க கூடிய பிரச்சனையாக இருக்கிறது. எடை அதிகமாக இருந்தால் பிடித்த உடைகளை அணிய முடியாது. வெளியில் சென்றாலே தெரிந்தவர்கள் இவ்ளோ குண்டா இருக்க என்று சொல்வார்கள். அதுமட்டுமில்லாமல் கிண்டல் செய்வார்கள். உடல் எடையை குறைப்பதற்கு மாத்திரை, உடற்பயிற்சி, உணவு முறை போன்றவற்றை செய்தாலும் எடை குறையாது. இதற்காக நீங்கள் ஜிம்க்கு செல்வீர்கள். இனி அந்த மாதிரியெல்லாம் கஷ்டப்படாமல் வீட்டிலிருந்தே உடல் எடை குறைப்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
இதையும் ட்ரை செய்து பாருங்கள் ⇒ 5 நாளில், 5 கிலோ உடல் எடையை குறைக்க இந்த ஜூஸ் குடிங்க போதும்..!
முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை:
முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை பழங்கள் மட்டும் சாப்பிட வேண்டும். பழங்களை தவிர வேற எந்த உணவையும் உட்கொள்ள கூடாது. அதற்காக பழத்தை மட்டும் சாப்பிட சொன்னார்கள் என்று தண்ணீர் குடிக்காமல் இருக்காதீர்கள். தண்ணீர் எவ்ளோ வேண்டுமானாலும் குடிக்கலாம். பழத்தில் வாழைப்பழத்தை தவிர எல்லாம் பழங்களையும் சாப்பிடலாம்.
இரண்டாம் நாள் திங்கட்கிழமை:
இரண்டாம் நாளான திங்கட்கிழமை காய்கறிகள் மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை உங்களுக்கு பிடித்த மாதிரி செய்து சாப்பிடலாம். ஆனால் வேற எந்த உணவுகளும் சாப்பிட கூடாது. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
மூன்றாம் நாள் செவ்வாய்க்கிழமை:
மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்து சாப்பிட வேண்டும். இரண்டையும் சமமாக சாப்பிட வேண்டும். உங்களுக்கு பிடித்த மாதிரி செய்து சாப்பிடலாம். வாழைப்பழம், உருளைக்கிங்கு மட்டும் சாப்பிட கூடாது.
நான்காம் நாள் புதன்கிழமை:
நான்காம் நாளான புதன்கிழமை பால் மற்றும் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். உங்களுக்கு பிடித்த மாதிரி செய்து சாப்பிடலாம். வேற எந்த உணவுகளையும்சாப்பிட கூடாது.
ஐந்தாம் நாள் வியாழக்கிழமை:
ஐந்தாம் நாளான வியாழக்கிழமை ஒரு பவுல் சாதம் மட்டும் சாப்பிட வேண்டும். அதனுடன் தக்காளியை எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். ஆனால் இந்த சாதம் எதாவது ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். மற்ற நேரங்களில் தக்காளியை மட்டும் சாப்பிட வேண்டும். நீங்கள் எப்பொழுதும் குடிக்கும் தண்ணீரை விட அதிகமாக குடிக்க வேண்டும்.
ஆறாம் நாள் வெள்ளிக்கிழமை:
ஆறாம் நாளான வெள்ளிக்கிழமை மதியம் மட்டும் ஒரு பவுல் சாதம் சாப்பிட வேண்டும். மற்ற நேரத்தில் காய்கறிகளை சாப்பிட வேண்டும். தண்ணீர் நிறைய குடியுங்கள்.
ஏழாம் நாள் சனிக்கிழமை:
ஏழாம் நாளான சனிக்கிழமை ஒரு பவுல் சாதம் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். அதனோடு பழங்களை ஜூஸாக குடியுங்கள். தண்ணீர் நிறைய குடியுங்கள்.
ஒரு வாரம் உணவு முறை முடிந்தது. இப்போது உடல் எடை செக் பண்ணி பாருங்கள். எடை குறைந்திருக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |