மூன்றாம் சார்லஸ் மன்னரின் சொத்து மதிப்பு எவ்வளவு..? உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

How Much Is King Charles III Worth in Tamil

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இவர் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி பிறந்தார். தற்போது இங்கிலாந்து நாட்டின் 3 ஆவது மன்னனாக பொறுப்பேற்றவர் தான் சார்லஸ். இவர் ஐக்கிய ராஜ்யத்தின் மன்னராகவும் மற்றும் ஏனைய 14 பொதுநலவாய ராஜ்யத்தின் மன்னனாகவும் இருக்கிறார். இவருடைய தாயார் இரண்டாம் எலிசபெத் ஆவார். இவர் பிரித்தானிய வரலாற்றில் மிக நீண்ட காலம் முடிக்குரிய வாரிசாக இருந்தவர் என்று சொல்லபடுகிறது. அதுபோல இவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் கிளிக் செய்து பாருங்கள்–> முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மூன்றாம் சார்லஸ் மன்னரின் சொத்து மதிப்பு எவ்வளவு..? 

மூன்றாம் சார்லஸ் மன்னரின் சொத்து மதிப்பு எவ்வளவு

இரண்டாம் எலிசபெத் உலகில் இருக்கும் பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர். இவருக்கு மத்திய லண்டன் அரண்மனை முதல் ஸ்காட்லாந்தில் உள்ள விவசாய நிலங்கள் என பல்வேறு சொத்துக்கள் இருக்கின்றன. இருந்தாலும் இந்த சொத்துக்களை கணக்கிட முடியாது என்று சொல்லப்படுகிறது.

மூன்றாம் சார்லஸ் மன்னரின் தாயார் இரண்டாம் எலிசபெத் ராணி செப்டம்பர் 8, 2022 அன்று காலமானார். அதன் பின் மூன்றாம் சார்லஸ் மன்னர் புதிய மன்னராக பொறுப்பேற்றார்.

மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு தாயாரின் கிரீடம் மட்டுமல்லாமல் அவர்களின் மொத்த சொத்துக்களும் கிடைத்துள்ளன.

மன்னராக ஆவதற்கு முன் சார்லஸின் சொத்து மதிப்பு சுமார் $100 மில்லியனாக இருந்தது. முக்கியமாக அவருக்கு Duchy of Cornwall என்ற நிர்வாகத்தை வழங்கியது.

அதேபோல, இரண்டாம் எலிசபெத் ராணியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலர் ஆகும். இராணி இறந்ததும் இந்த தனிப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் மூன்றாம் சார்லஸ் மன்னரின் பெயரில் மாற்றப்பட்டுள்ளது.

Duchy of Cornwall என்ற நிர்வாகம் 1.05 பில்லியன் யூரோ மதிப்புடையது. இந்த நிர்வாகம் முன்பு மூன்றாம் சார்லஸ் மன்னரிடம் இருந்தது. அது வாரிசுக்கு கொடுக்கப்படும் நிர்வாகம் என்பதால் இப்பொழுது அது இளவரசர் வில்லியமிடம் ஒப்படைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

 தற்போது மூன்றாம் சார்லஸ் மன்னரின் சொத்து மதிப்பு 653 மில்லியன் யூரோ என மதிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு வழங்கப்பட்ட மற்ற சலுகைகளில் எஸ்டேட் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  

அதுபோல, மன்னரின் சொத்து மதிப்பிலிருந்து 40% மட்டும் வரி விதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

சொத்து மதிப்பில் அம்பானியை முந்திய கெளதம் அதானி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement