கூகுள் CEO சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு எவ்வளவு..? உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Net Worth Of Google CEO Sundar Pichai in Tamil

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் கூகுள் CEO என்று சொல்ல கூடிய சுந்தர் பிச்சை அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இவர் தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருக்கிறார். இவர் பல புதுமையான முயற்சிகளை தனது தலைமையின் கீழ் மேற்கொண்டுள்ளார். சுந்தர் பிச்சையின் தலைமையின் கீழ் உருவான Google Chrome மற்றும் Chrome OS உள்ளிட்ட கூகுளின் சில தயாரிப்புகள் நல்ல வெற்றிகளை கண்டுள்ளன. அந்த வகையில் இந்த பதிவின் மூலம் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இங்கிலாந்து பிரதமரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

சுந்தர் பிச்சை வரலாறு: 

சுந்தர் பிச்சை வரலாறு

இவர் தமிழ் நாட்டில் மதுரை மாவட்டத்தில் 1972 ஆம் ஆண்டு ரெகுநாத பிச்சைலட்சுமி பிச்சை தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். சுந்தர் பிச்சை தன்னுடன் படித்த அஞ்சலி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காவ்யா மற்றும் கிரண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள சவகர் வித்தியாலயா பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். பின் வனவாணி பள்ளியில் 12 ஆம் வகுப்பு  படித்தார். பிறகு IIT கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்றார். ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் பொருளறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

 இவர் 2004 ஆம் ஆண்டு கூகுள் பொறியாளராக வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் பணியாற்றி வந்தார். இவர் கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வந்தார். இப்பொழுது கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.  

இதையும் பாருங்க –> மூன்றாம் சார்லஸ் மன்னரின் சொத்து மதிப்பு எவ்வளவு..? உங்களுக்கு தெரியுமா..?

சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு எவ்வளவு..? 

இவர் இன்றைய நிலையில் அதிகளவு சம்பளம் வாங்கும் அதிகாரிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இப்போது இவர் உலகளவில் அதிகளவு சம்பளம் வாங்கும் அதிகாரியாக இருக்கிறார்.

கடந்த 2 வருடத்தில் இவருடைய சொத்து மதிப்பு 79% வளர்ச்சி அடைந்துள்ளது என்று சொல்லப்படுகிறது.

 தற்பொழுது 2022 ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு தோராயமாக $1310 மில்லியன் (1.31 பில்லியன்) ஆகும். அதாவது, அவரின் சொத்து மதிப்பு ரூ. 10,810 கோடி என்று சொல்லப்படுகிறது.  

இவருடைய சொத்து மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் வளரும் என்று கூறப்படுகிறது. இந்த 2022 வருடத்தில் மட்டும் இவருடைய ஆண்டு வருமானம் $242 மில்லியன் என்று சொல்லப்படுகிறது. இவருடைய தனிப்பட்ட முதலீடுகள் மட்டும் $572.5 மில்லியன் வரை இருக்கும்.

இந்தியாவில் இருக்கும் பணக்காரர்கள் பட்டியலில் சுந்தர் பிச்சை 5 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள்–> முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement