களவழி நாற்பது நூல் குறிப்பு பற்றி தெரிந்து கொள்வோமா..?

Kalavali Narpathu in Tamil

Kalavali Narpathu in Tamil..! 

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் இனிமையான நேயர்களே… இன்றைய பதிவில் களவழி நாற்பது நூல் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். நம் தமிழ் மொழியில் பல வகையான நூல்கள் உள்ளன. ஒவ்வொரு நூல்களும் நமக்கு ஏதோ ஒரு விஷயத்தை கூறுகின்றன. அதுபோல நம் தமிழ் மொழியில் உள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான களவழி நாற்பது நூலின் குறிப்பு மற்றும் இதன் ஆசிரியர் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ திருமுருகாற்றுப்படை நூல் குறிப்பு

களவழி நாற்பது நூல் குறிப்பு: 

இந்த களவழி நாற்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் உள்ள நூல் ஆகும். இந்நூல் புறப்பொருள் பற்றி கூறுகிறது. இந்நூலில் போர்க்களம் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த களவழி நாற்பது நூலை இயற்றியவர் பொய்கையார் என்னும் தமிழ் புலவர் ஆவார். இந்த களவழி நாற்பது நூல் 40 பாடல்களை கொண்டுள்ளது. இந்நூலில் 2 திணைகள் இடம்பெற்றுள்ளன. அவை புறத்திணை மற்றும் வாகைத்திணை ஆகும்.

இந்நூல் வெண்பா பாவகையினால் ஆனது. இந்நூல் போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டதால் “களவழி நாற்பது” எனப் பெயர் பெற்றது. இந்நூலில் கார்த்திகைத் திருவிழா பற்றி சிறப்பாக கூறப்பட்டுள்ளது.

களவழி நாற்பதில் உள்ள நாற்பது பாடல்களும் ‘களத்து‘ என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிகிறது. இந்நூல் தொல்காப்பியர் கூறும் அம்மை என்னும் வனப்பு வகையை சேர்ந்தது.

போர்க்களத்தில் இருக்கும் சேரமானை விடுவிப்பதற்காக பொய்கையார் புலவர் இந்நூலை இயற்றியுள்ளார்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ இன்னா நாற்பது நூல் குறிப்பு

களவழி நாற்பது ஆசிரியர் குறிப்பு: 

களவழி நாற்பது நூலை இயற்றியவர் பொய்கையார் என்னும் தமிழ் புலவர் ஆவார். இவர் சங்க கால புலவர் என்று கூறப்பட்டுள்ள்ளது.  இவர் இயற்றிய மூன்று பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவர் பொய்கை என்னும் ஊரில் பிறந்ததால் இப்பெயர் வந்தது.

இவர் சேர மன்னனுடைய நண்பன் ஆவார். போர்க்களத்தில் நடைபெற்ற போரில் சேரன் தோற்றுக் கைதியாகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந்நூல் எனக் கூறப்படுகிறது.

இவர் இயற்றியுள்ள இந்நூல் மிகப் பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகள் பற்றிக் கூறுகின்றன. இந்நூல் பண்டைத்தமிழரின் அரசியலையும், ஆட்சிமுறையையும், அவற்றில் இடம்பெற்றுள்ள களப்போர் நிகழ்வுகளையும் பொய்கையார் புலவர் விரிவாக கூறியுள்ளார்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil