கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்..?

Valaikappu Seemantham

ஏழாவது மாதத்தில் ஏன் வளைகாப்பு செய்கிறார்கள்..! Baby Shower In Tamil..!

Valaikappu Seemantham: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏன் ஏழாவது மாதத்தில் வளைகாப்பு செய்கிறார்கள் என்ற விவரங்களை பற்றித்தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். நம் நாடுகளில் இன்றும் வளைகாப்பு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுத்தான் இருக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவதன் மூலம் பிரசவம் எளிதாக அமையப்பெறும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த வளையல் அணிவதன் விழாவை தான் வளைகாப்பு மற்றும் சீமந்தம் என்று நாம் அழைக்கிறோம். கர்ப்பிணி பெண்ணிற்கு சீமந்தம் செய்யும் போது பெண் வீட்டார்கள் அனைவரையும் அழைத்து இந்த விழாவினை செய்வது வழக்கம் ஆகும்.

வளைகாப்பு என்பது கர்ப்பமாக இருக்கும் அனைத்து பெண்ணுக்கும் மனதில் ஆசையும், ஏக்கமும் இருக்கும். இந்த விழாவை ஏன் ஆறாம் மற்றும் எட்டாம் மாதத்தில் செய்யாமல் குறிப்பிட்டு ஏழாம் மாதம் வளைகாப்பு(baby shower wishes in tamil) செய்கிறார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். நம் முன்னோர்கள் யாரும் பலன் இல்லாமல் எந்த செயலையும் செய்யவில்லை. வளைகாப்பு விழாவில் கூட கர்ப்பிணி பெண் கணவனை எப்போது பிரிந்து இருக்க வேண்டும் என்பதில் தொடங்கி, அதன் காரணத்தினை தெளிவாக கூறியுள்ளார்கள். சரி வாங்க இப்போது வளைகாப்பு ஏன் நடத்துகிறார்கள் என்ற விவரத்தினை விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்..!

newகர்ப்ப காலத்தில் குங்குமப்பூ அதிகம் சாப்பிடலாமா?Saffron benefits in tamil

Valaikappu Seemantham

ஏழாம் மாதம் சீமந்தம் செய்வது ஏன்:

கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு(baby shower in tamil) இடுவது ஏழாவது மாதத்திற்கு பிறகு கணவன் மனைவி உடலுறவில் ஈடுபடுவது மிகவும் பிரச்சனைகள் வர கூடும். இதனால் தான் முன்னோர்கள் அந்த மாதத்தில் வளைகாப்பு செய்து தம்பதியினரை பிரித்து வைக்கின்றனர்.

ஏழு மாதத்திற்கு பிறகு கணவன் மனைவி உறவில் ஈடுபட்டால் கருவில் குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாட்டுடன் இருக்கும்.

கர்ப்பிணி பெண்ணிற்கு தைரியம் உண்டாகும்:

கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு மன தைரியத்தினை ஊட்டுவதற்காக வளையல் அணியும் விழா நடத்தப்படுகிறது. பிள்ளை பெற்ற பெண்களை கர்ப்பிணி பெண்ணிற்கு காட்டுவதற்காக தான் இந்த விழாவிற்கு வர வைப்பார்கள்.

கருவில் வளரும் குழந்தைக்கு வளையல் சத்தம் தாலாட்டு போன்றும்,   உடலுக்கு பாதுகாப்பு உணர்வை கொடுப்பதாலும் இந்த ஏழாம் மாதத்தில் வளைகாப்பு விழா கொண்டாடப்படுகிறது.

பிரசவ இடம்:

வளையல் அணியும் விழா பிரசவத்தை எளிமையாக நடத்தும் என்ற நம்பிக்கை, கர்ப்பிணியின் முதல் பிரசவ காலத்தினை அந்த பெண்ணின் வீட்டில் செய்தால் அவளுக்குள் இருக்கும் பயம் நீங்கி பிரசவம் நன்கு நடப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

கர்ப்பிணி பெண்ணுக்கு உணவு முறை:

கர்ப்ப காலத்தில் இருக்கும் போது அந்த பெண்ணுக்கு சத்துக்கள் நிறைந்த தனிப்பட்ட உணவுகளை கொடுக்க வேண்டும். வளைகாப்பு விழா(seemantham in tamil) அன்று 7 விதமான உணவுகளை வைத்து கர்ப்பிணி பெண்ணை ஆசிர்வதித்து செல்வார்கள். இதனால் கர்ப்பிணி பெண்ணும், கருவில் வளரும் குழந்தையும் நன்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

வளைகாப்பு தேவையான பொருட்கள்

சுகப்பிரசவம் நடக்க:

கர்ப்பிணி பெண்ணுக்கு உடல் நலமும் மன நலமும் ஆரோக்கியமாக செயல்பட வேண்டும் என்பதற்காக தான் கர்ப்பிணி பெண்களுக்கு ஏழாம் மாதத்தில் வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் சுகப்பிரசவம் என்று சொன்னாலே பயம் கொள்கிறார்கள்.

இதன் காரணம் உடலில் தேவையான அளவிற்கு சத்துக்கள் இல்லை, சரியான உடல் வேலைகள் இல்லாததால் அனைவரும் சிசேரியன் செய்து கொள்வதற்கு ஒப்புதல் தெரிவிக்கின்றனர்.

newகர்ப்ப காலத்தில் என்ன மூலிகைகளை சாப்பிடகூடாது? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்?

கர்ப்ப கால பயணம்:

கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் தாய் வீட்டிற்கு 7அல்லது 9ஆம் மாதத்தில் செல்வார்கள். ஏனென்றால் கருவானது கலைவதற்கு வாய்ப்பு இருப்பதால் அந்த மாதத்தில் அதோடு கர்ப்ப காலத்தில் இருந்து பிள்ளையை பெற்றப்பின் கணவர் வீட்டிற்கு மூன்று மாதங்களுக்கு பிறகு தான் வர முடியும். இது உடலுறவை தவிர்த்து கொள்வதற்காக எடுக்கப்படும் முயற்சியாகும்.

இசையின் அற்புதம்:

கர்ப்ப காலத்தில் இருக்கும் போது கர்ப்பிணி பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த மன அழுத்தத்தினை சுலபமாக குறைக்க மெல்லிய இசையினை கேட்பதால் இதனை குறைக்கலாம். கருவில் இருக்கும் சிசுவிற்கு இதனால் கேட்கும் திறன் அதிகரிக்க செய்யும்.

மன அழுத்தம் அதிகமாக இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பே குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பதற்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.

நெய் சாப்பாட்டு முறை:

கலாச்சாரத்தின் படி கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் தன் கணவன் வீட்டில் இருந்து தாய் வீட்டிற்கு செல்லும்போது நெய் டப்பாவினை கொடுத்து அனுப்புவார்கள். ஏனென்றால் கர்ப்பிணி பெண்கள் நெய் சாப்பிடுவதால் தசைகளை தளர வைத்து பிரசவத்தினை சுலபமாக மாற்றும் என்று அறிவியல் ரீதியாக கூறுகிறார்கள்.

தனித்துவம்:

எந்த ஒரு பெண் கர்ப்ப காலத்தில் இருக்கும் போது அவளது பெற்றோர்களாலும் சரி, நண்பர்களாலும் சரி தனித்துவமாக உபசரிக்கப்படுவாள். இதனால் அந்த பெண்ணை சந்தோஷமாகவும், மன அமைதியாகவும் வைத்திருக்கும்.

கர்ப்ப காலத்தில் மனதை அமைதி நிலையிலும், உடலை ஆரோக்கியமாக வைப்பது பிரசவத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

newசுக‌ப்பிரசவம் ஆகணுமா ? Simple Normal Delivery Tips in Tamil..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tamil Tech News