கெளுத்தி மீன் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Cat Fish in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்… இன்றைய பதிவின் மூலம் கெளுத்தி மீன் பற்றிய சில அற்புதமான தகவல்களை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். நம் நாட்டில் பல வகையான மீன்கள் இருக்கின்றன. அனைத்து நாடு மக்களுமே அசைவ உணவுகளில் மீனை விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மீன் வகைகளில் கெளுத்தி மீன் முதலிடத்தை பிடித்துள்ளது. கெளுத்தி மீன் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அதுபோல இந்த பொதுநலம்.காம் பதிவின் மூலம் கெளுத்தி மீன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க…

சூரை மீன் பற்றிய சில அற்புதமான தகவல்கள்

கெளுத்தி மீன்:

இந்த கெளுத்தி மீனை கெளிறு அல்லது கெழுது என்று அழைப்பார்கள். கெளுத்தி மீன் கடலிலும் மற்றும் நன்னீரிலும் வாழும் மீன் குடும்பத்தை சேர்ந்தது. இந்த கெளுத்தி மீனில் ஆயிரக்கணக்கான வகை மீன்கள் உள்ளன.

கெளிறு என்று சொல்ல கூடிய கெளுத்தி மீன்களுக்கு செதில்கள் கிடையாது. இந்த மீன் பூனை போல் மீசைகளை கொண்டுள்ளதால் இது சில நாடுகளில் பூனை மீன் Cat Fish என்று அழைக்கப்படுகிறது.

பெரும்பாலான நாடுகளில் கெளுத்தி மீன்கள் உணவாக உண்ணப்படுகின்றன.

கெளுத்தி மீன் அமைப்பு:

கெழுத்தின் மீனின் உடல் அமைப்பு மேற்புரத்தில் கருப்பு நிறமாகவும், கீழ் புறத்தில் வெள்ளை நிறமாகவும் இருக்கும். தட்பவெப்ப நிலை அதிகம் உள்ள நாடுகளில் இருக்கும் ஆறுகளில் இந்த கெளுத்தி மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

இந்த கெளுத்தி மீன்கள் தங்களுடைய மொத்த வாழ்நாளையும் ஆழமான நீர்நிலைகளில் கழிக்கின்றன. இவற்றின் மீசைகள் ஆழமான இடங்களில் நீந்துவதற்கு பயன்படுகின்றன.

கெளுத்தி மீன்களின் மீசை நீளமாக வளரும் தன்மையை கொண்டுள்ளது. இந்த கெளுத்தி மீன்களுக்கு இரவு நேரத்தில் கண்கள் தெரியாது என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.

புழுக்கள் போல அசையும் கெளுத்தி மீனின் மீசைகள் சிறிய மீன்களை கவர்ந்து இழுக்கின்றன.

கெளுத்தி மீன் பயன்கள்:

கெளுத்தி மீனில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உயர்தர புரதச்சத்து இந்த மீனில் அதிகம் காணப்படுகின்றன. இந்த கெளுத்தி மீனை வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

கெளுத்தி மீனில் உள்ள கலோரிகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் மற்றும் ஒமேகா 6 பேட்டி ஆசிட் அதிகம் இருப்பதால் இது இதயம் சம்மந்தப்பட்ட நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

இதில் உள்ள புரதச்சத்து, தசை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு செயல் திறனை மேம்படுத்துகிறது. கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உடலுக்கு நல்ல ஆற்றலை தருகின்றன.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement