‘N’ Letter name Characteristics in Tamil..!
வணக்கம் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது ‘N’ என்ற எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றிதான் பார்க்க போகிறோம். மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு விதமான குணங்கள் இருக்கும். அதில் இன்று நாம் ‘N’ என்ற எழுத்தில் பெயர் கொண்டவரின் குணாதிசியங்கள் எப்படி இருக்கும் என்று பார்க்க போகிறோம்.
பொதுவாக ராசி நட்சத்திரத்தை வைத்துதான் ஒருவரின் குணத்தை அறிவார்கள் ஆனால் இன்று நாம் கொஞ்சம் வித்தியாசமாக பெயரின் முதல் எழுத்தை வைத்து அவரின் குணாதிசயங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைமுறை எப்படி இருக்கும் என்று தான் பார்க்கப்போகின்றோம். இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
‘N’ என்ற எழுத்தில் பெயர்களை கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள்..?
இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் அவற்றின் பெயர்தான் ஒரு அடையாளமாக திகழ்கின்றது எந்த ஒரு உயிரினமும் பெயரில்லாமல் இருக்காது. அந்த வகையில் இன்று‘N’ என்ற எழுத்தில் பெயர்களை கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள்..? என்று பார்ப்போம்.
இந்த N என்ற எழுத்தை நீங்கள் உற்று நோக்கி பார்த்தீர்கள் என்றால் முதலில் கீழிருந்து மேலே போகும் பிறகு சற்று சரிவலக போயி பிறகு மேல்நோக்கி போகும். இதை போலேதான் இந்த N என்ற எழுத்தில் பெயர் ஆரம்பமாகும் நபர்களின் வாழ்க்கையும் முதலில் கீழிருந்து மேலே செல்லும் அதாவது வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறி வருவார்கள் பின்பு சற்று சரிவடைந்து அதிலிருந்து மீண்டு முன்னேறி மேல்நோக்கி செல்வார்கள்.
பொதுவாக இந்த N என்ற எழுத்தில் பெயர் கொண்டவர்களின் வாழ்க்கைநிலை என்று பார்த்தால் இவர்களுக்கு அனைத்து நிலையில் உள்ள மக்களிடமும் பழக்கம் வைத்திருப்பார்கள் மேலும் இவர்கள் எந்தவித பாகுபாடும் பார்க்காமல் பழகுவார்கள்.
இவர்களின் வாழ்க்கையில் அனைத்தையும் பார்த்தவர்களாக இருப்பார்கள் அதாவது இவர்கள் பழைய சாதமும் சாப்பிட்டுருப்பார்கள் பிட்ஸா பர்கர் என்று விலை உயர்ந்த உணவுகளையும் சாப்பிட்டுருப்பார்கள்.
இந்த எழுத்தில் பெயர் கொண்டவர்களின் அடிப்படையான குணங்களாக பொதுவாக கூறப்படுவது இவர்கள் எந்த இடத்திற்கு செல்லுகிறார்களோ அந்த இடத்தை விரைவாக அங்கிருக்கும் சூழலை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ற மாதிரி இவர்கள் தன்னை மாற்றி கொள்ளுவார்கள்.
மேலும் இவர்களுக்கு தான் என்ற எண்ணம் இருக்காது முன்பு கூறியதுபோல் இவர்கள் எல்லாவிதமான சூழலையும் பார்த்தவர்களாக இருப்பார்கள். அதாவது நல்ல வசதியையும்,நல்ல வறுமையையும் பார்த்தவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்தால் இவர்கள் தனது குடும்பத்தை மிகவும் நேசிப்பவர்களாக இருப்பார்கள். அதாவது அன்புதான் எல்லாம் அன்பை சுற்றித்தான் வாழ்க்கையுள்ளது என்று எண்ணியே வாழ்வார்கள்.
இவர்கள் அன்புக்கு அடிமை என்பதால் இவர்களின் கண்ணை அன்பு மறைத்துவிடும் என்று எண்ணாதீர்கள் எந்த ஒரு இடத்திலேயும் நின்னு நிதானமாக முடிவுஎடுபவர்களாக இவர்கள் இருப்பார்கள்.
மேலும் இவர்கள் சிறியவயதிலேயே வாழக்கையயை ரொம்ப கற்றுக்கொண்டவர்கள் என்பதால் இவர்கள் எந்த ஒரு வேலைக்கு சென்றாலும் அந்த வேலையில் உள்ள நுணுக்கங்களை அடிப்படையில் இருந்து விரைவாக கற்றுக்கொண்டு உச்சத்தை அடைவார்கள்.
அதாவது இவர்களிடம் காரில் உள்ள பழுதை நீக்கும் வேலையில் உள்ள நுணுக்கங்களை பற்றி கேட்டாலும் கூறுவார்கள். அதேபோல் கணினியில் உள்ள தொழில் நுட்பங்களையும் பற்றி கேட்டாலும் கூறுவார்கள்.
இவர்களின் பொதுவான குணங்களாக நம்பிக்கை இவர்கள் மிகவும் நம்பிக்கைகொண்டவர்களாக இருப்பார்கள். அடுத்து இவர்கள் மிகவும் நாணயமாக இருப்பார்கள்.
மேலும் இவர்கள் மிகவும் நேர்மையாக இருப்பார்கள் மற்றவர்களும் இவர்களிடம் நேர்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதேபோல் இவர்கள் மிகவும் நெஞ்சழுத்தம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் ஒருவிஷயத்தில் வாதம் செய்து ஜெயிக்கவே முடியாது. இவர்கள் சரியான விஷயத்தை மட்டும்தான் பேசுவார்கள் அதற்காக நின்று ஜெய்க்கவும் செய்வார்கள்.
N என்ற எழுத்தில் பெயர் கொண்டவர்கள் ரொம்பவுமே புத்திசாலியாக இருப்பார்கள் எளிதில் பேசமாட்டார்கள் அப்படி பேசினாலும் சரியான விஷயத்தை மட்டும்தான் பேசுவார்கள். இவர்கள் பேச ஆரம்பித்துவிட்டாள் நிறுத்தமாட்டார்கள்.
உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘A’ வாக இருந்தால் உங்களின் குணம் இப்படி தான் இருக்கும்..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |