இரவு தூங்கும்போது 2 மணிக்கு முழிப்பு வருகிறதா..! அப்போ இதை தெரிந்துகொள்ளுங்கள்

Advertisement

தூங்கும் போது முழிப்பு வருதல் 

வணக்கம் நண்பர்களே..! மனிதர்களுக்கு உடல் ஆரோக்கியம் என்பது சாப்பிடும் உணவில் மட்டும் இல்லாமல் சரியாக தூங்குவதிலும் இருக்கிறது. பகல் முழுவதும் வேலைகளை முடித்து விட்டு இரவில் எல்லோரும் அசந்து தூங்குவார்கள். அப்படி தூங்கும் போது திடீரென்று 2 மணியிலிருந்து 5 மணிக்குள் முழிப்பு வரும் ஆனால் அதற்கான காரணம் என்வென்று சரியாக தெரிந்து இருக்காது. அதுபோல தீடிரென முழிப்பு வருவதற்கான காரணம் என்ன என்பதை இன்றைய பதிவில் படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ பசிக்கும் போது ஏன் வயிறு கத்துகிறது தெரியுமா..?

what is the reason for not sleeping at night in Tamil:

இரவு நீங்கள் 10 மணிக்குள் தூங்க சென்று விட்டீர்கள் என்றால் அதன் பிறகு நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பீர்கள். அப்போது திடீரென்று 2 மணிக்கு முழிப்பு வரும்.

அந்த 2 மணி என்பது பிரம்மமுகூர்த்தம் என்று சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் உங்களின் ஆசைகளை நீங்கள் மனதில் நினைத்து இந்த பிரபஞ்சத்திற்கு தெரியப்படுத்தினால் விரைவில் அந்த ஆசைகள் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.

அதுபோல நீங்கள் 10 மணிக்கு மேல் தூங்க சென்றீர்கள் என்றால் உங்களுக்கு 3 அல்லது 4 மணிக்கு முழிப்பு வரும். அப்போது உங்களின் ஆசைகளை பிரபஞ்சத்திற்கு தெரியப்படுத்தினால் அது நிறைவேறாது. ஏனென்றால் அது சரியான பிரம்மமுகூர்த்தம் கிடையாது. 

இந்த பிரம்மமுகூர்த்தம் என்பது உங்களின் ஆசைகள் நிறைவேறுவதற்கான ஒரு நல்ல நேரமாக இருக்கிறது. அத்தகைய பிரம்மமுகூர்த்த நேரத்தில் உங்களின் ஆசைகளை தெரியப்படுத்தி விட்டு மீண்டும் நீங்கள் தூங்கி விடலாம்.

தூங்கும் போது உடலில் நடக்கும் செயல்கள்:

இரவில் நீங்கள் தூங்கும் போது மனதில் உள்ள மன கவலைகள் அனைத்தும் நீங்கி மறுநாள் உங்களை புத்துணர்ச்சியுடன் வைக்க செய்கிறது.

அதுபோல உங்களின் கனவுகளை பிரபஞ்சத்திற்கு தெரியப்படுவதற்கான சரியான நேரமும் உங்களுடைய தூக்கம் தான்.

நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது எதிர்கால வாழ்க்கை பற்றிய சிந்தனைக்குள் உங்களை கொண்டு செல்கிறது.

இரவு 10 மணி முதல் 4 மணி வரை தூங்கும் நேரமானது தூக்கத்திற்கான சரியான நேரமாகும்.

தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 நிலநடுக்கம், சுனாமி வருவதை சில உயிரினங்கள் மட்டும் முன்கூட்டியே அறிகிறதே அது எப்படி தெரியுமா?

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Interesting information 
Advertisement