Gmail Notification in Tamil
வணக்கம் அன்பான நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் அனைவருக்கும் பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். எல்லாரிடமும் ஸ்மார்ட் போன் கட்டாயம் இருக்கும். ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதற்கு Gmail id கட்டாயம் தேவை. Gmail Account இருந்தால் தான் நாம் சில சேவைகளை தொடர முடியும். அதுபோல வங்கி சேவை போன்ற செய்திகளை இதன் மூலம் நாம் பார்த்து கொள்ள முடியும். சில சமயங்களில் Gmail Account -க்கு வரும் செய்திகள் வருவதில்லை. அதற்கு என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா..? இன்று இந்த பதிவின் மூலம் அதற்கான தீர்வை தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
உங்கள் போன் Setting -ல் மறைந்துள்ள ரகசியம் உங்களுக்கு தெரியுமா..? |
Gmail Notification Problem Solved in Tamil:
எல்லாருடைய ஸ்மார்ட் போனிலும் Gmail Id கட்டாயம் இருக்கும். அதேபோல ஒரு மொபைலில் 1 அல்லது 2-க்கு மேற்பட்ட Gmail Id பயன்படுத்தி கொள்ளவும் முடியும். நாம் பயன்படுத்தும் Gmail Id -க்கு சில செய்திகள் வரும். அந்த செய்திகள் சில சமயங்களில் வராமலும் இருக்கலாம். அதற்கான தீர்வை இங்கு பார்க்கலாம் வாங்க.
ஸ்டெப் -1
- முதலில் உங்களுடைய ஸ்மார்ட் போனில் Setting என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
- பின் அதில் Notification என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் Included Apps என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- பின் உங்கள் மொபைலில் உள்ள எல்லா Application தோன்றும். அதில் Gmail என்பதை தேர்ந்தெடுத்து On செய்ய வேண்டும்.
ஸ்டெப் -2
- பிறகு உங்களுடைய மொபைல் போனில் Gmail என்ற ஆப்ஷனை Open செய்ய வேண்டும்.
- அதன் உள்ளே சென்ற உடன் மேலே 3 கோடுகள் போன்ற அமைப்பு இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
- பின் அதே கீழே Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் General Setting என்ற ஆப்சன் தோன்றும்.
- அதில் நீங்கள் பயன்படுத்தும் அனைத்து Gmail Id-ம் தோன்றும். அதில் எந்த Gmail Id க்கு Notification வரவில்லையோ அதை கிளிக் செய்து Open செய்ய வேண்டும்.
- பின்பு அதில் Notification என்பதை Open செய்து All என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு அதன் கீழே Inbox Notification என்பதை Open செய்து அதில் Notify For Every message என்ற ஆப்ஷனில் டிக் செய்ய வேண்டும்.
அவ்வளவு தான் நண்பர்களே இனி உங்கள் Gmail Id-க்கு வரும் அனைத்து Notification தவறாமல் உங்கள் மொபைலில் தோன்றும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |