போஸ்ட் ஆபீஸ்க்கு இனி செல்ல தேவையில்லை இப்படி ஒரு வசதி வந்துடுச்சே இனி கவலை எதற்கு..!

Advertisement

How to Activate Post Office Internet Banking Online in Tamil

நண்பர்களே வணக்கம். யாரெல்லாம் போஸ்ட் ஆபிஸில் கணக்கு வைத்திருக்கிறீர்கள். அப்படி வைத்திருக்கிறீர்கள் என்றால் இந்த விஷயத்தை தெரிந்துகொள்ளுங்கள். கணக்கு வைத்திருப்பவர்கள் எவ்வளவு பணம் உள்ளது என்பதை பார்ப்பதற்கு அடிக்கடி போஸ்ட் ஆபீஸ் போகவேண்டியது இருக்கும். அதேபோல் அங்கு சென்று தான் கணக்கை துவங்க வேண்டும் என்பதும் ஒரு பெரிய கவலையாக இருக்கும். அதனாலே கணக்கை துவங்காமல் இருப்பார்கள். அப்படி கஷ்டப்படும் அனைவருக்குமே இந்த பதிவை படித்து பார்த்து உடனே போன் மூலம் தேவையான தகவலை தெரிந்துகொள்ளலாம் . இது உங்களுக்கு அனைத்து விதத்திலும் நன்மைகளை தரும். சரி வாங்க போன் மூலம் கணக்கு துவங்குவது எப்படி என்று.

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கு:

ஸ்டேப்-1

முதலில் இன்டர்நெட் பேங்கிங் Activate செய்வதற்கு முதலில் போஸ்ட் ஆபீஸ் சென்று அதற்கான படிவத்தை வாங்கி அதில் கேட்கப்பட்டிருக்கும் அதனை Capital Letter-ல் எழுதிவிடவும். அனைத்தையும் எழுதி கொடுத்த பின்.

உங்களுடைய போனுக்கு sms வரும் அதில் ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்தால்

 How to activate post office internet banking online in tamil

இந்த படத்தில் உள்ளதை போல் காணப்படும். பின்பு

ஸ்டேப்-2

உடனே அதில் உங்களுடைய id பதிவிட்டு அப்ளை செய்தால் அது சரியாக பதில் அளிக்காது ஆகவே அதற்கு கீழ் New User Activation என்பதை கிளிக் செய்யவேண்டும். பிறகு.

ஸ்டேப்-3

 How to activate post office internet banking online in tamil

பிறகு மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளதை போல் காணப்படும் அதில் உங்களுடைய Customer id உள்ளிடவும்  அதவாது உங்களுடைய கணக்கு புத்தகத்தில் உள்ள CIF நம்பர் தான் அதனையும் கணக்கு வைத்திருக்கும் நம்பரையும் உள்ளிடவும்.

பின்பு continue என்பதை கிளிக் செய்யவும். அதன் பின் உங்களுடைய போனுக்கு Otp வரும்.

ஸ்டேப்-4

 How to activate post office internet banking online in tamil

நீங்கள் Continue என்று கொடுத்தவுடன் இந்த மாதிரியான Page open ஆகும். அதில் போனுக்கு வந்த Otp யை உள்ளீட்டு Continue என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்-5

 How to activate post office internet banking online in tamil

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளதை போல் Set Internet Login Password என்பதையும், Set Transaction Password என்பதை கிளிக் செய்துவிட்டு உங்களுக்கான கடவு சொற்களை உள்ளீட்ட பிறகு Continue என்ற option என்பதை கிளிக் செய்து விடவும்.

ஸ்டேப்-6

 How to activate post office internet banking online in tamil

இப்போது மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளதை போல் Page காணப்படும். அதில் Go to login page என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்-7

 How to activate post office internet banking online in tamil

இப்போது உங்களுடைய CIF ID உள்ளீட்டு பின்பு Captcha code கொடுக்கப்பட்டிருக்கும் அதனை உள்ளீட்டு லாகின் என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்-8

 How to activate post office internet banking online in tamil

முன்பு லாகின் கடவு சொற்கள் செட் செய்ததை இதில் உள்ளீடவும். LOG IN என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்-9

 How to activate post office internet banking online in tamil

இப்போது உங்களுடைய போனுக்கு OTP வந்திருக்கும் அதனை உள்ளீடவும்.

ஸ்டேப்-10

 How to activate post office internet banking online in tamil

இப்போது NEXT PAGE OPEN ஆகும். அதில் கீழ் AGREE என்பதை கிளிக்  செய்து  விடவும்.

ஸ்டேப்-11

 How to activate post office internet banking online in tamil

இப்போது உங்களுடைய பாதுகாப்பிற்காக சில கேள்விகள் கேட்கப்படும் அதில் 5 கேள்விகளை Select செய்து அதற்கு பதில் கொடுக்கவேண்டும்.

பின்பு register என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்-12

NEXT PAGE OPEN ஆகும்.  முன்பு  கொடுப்பட்ட ஏதோ ஒரு கேள்விகளை உதாரணத்திற்கு மேல் Pet name என்பதை உள்ளீட்டு Update என்பதை கொடுத்துவிட்டால் NEXT PAGE OPEN ஆகும்.

ஸ்டேப்-13

அதில் முன்பு என்ன Password கொடுத்தீர்களோ அதனை உள்ளீட்டபிறகு ஓகே என்பதை கொடுத்துவிட்டால் அவ்வளவுதான் உங்களுக்கான போஸ்ட் ஆபிஸ் Net பேங்கிங் open ஆகும்.

உங்களுக்கு தேவையான கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கும்.

போஸ்ட் ஆபீஸில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement