Multiple Bank Account In Google Pay
இந்த காலகட்டத்தில் அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் எத்தனையோ ஆப்கள் இருக்கின்றன. இன்றைய நிலையில் நாம் ஸ்மார்ட் போனில் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றோம். வங்கிக்கு செல்லாமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தே பேங்க் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை மற்றவர்களுக்கு அனுப்பியும், அந்த பணத்தை பெற்று கொண்டும் வருகின்றோம்.
அதனாலேயே மக்கள் போனில் Google Pay, Phone Pe, Paytm போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதுபோல Google Pay -இல் ஒன்றுக்கு மேற்பட்ட Bank Account -யை பயன்படுத்த முடியுமா..? அந்த வகையில் இந்த பதிவின் மூலம் Google Pay -இல் ஒன்றுக்கு மேற்பட்ட Bank Account -யை இணைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How To Add Multiple Bank Account In Google Pay Tamil:
ஸ்டேப் -1
முதலில் உங்களுடைய போனில் Google Pay ஆப் உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் மேலே உங்களுடைய Profile Picture இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -2
பின் அதில் Bank Account என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
Google Pay -இல் User Name -யை மாற்றுவது எப்படி உங்களுக்கு தெரியுமா..? |
ஸ்டேப் -3
பின் அதில் Add Bank Account என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளவும். ஒரே போன் நம்பரில் 2 Bank Account ஓபன் செய்திருந்தால் மட்டுமே google Pay -ல் 2 Account பயன்படுத்த முடியும்.
ஸ்டேப் -4
அதில் நீங்கள் 2 ஆவதாக என்ன Bank Account ஓபன் செய்ய போகிறீர்களா அதை தேர்வு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, நீங்கள் Indian Bank Account பயன்படுத்துகிறீர்கள், இப்பொழுது State Bank Account பயன்படுத்த வேண்டும் என்றால் State Bank என்பதை கிளிக் செய்து Enter Upi Pin என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Gpay -ல் Email ID -யை மாற்ற வேண்டுமா..? அப்போ இப்படி செய்யுங்க..! |
ஸ்டேப் -5
பின் உங்கள் மொபைல் எண்ணிற்கு நீங்கள் Add செய்த பேங்கில் இருந்து ஒரு OTP எண் வரும். அதை கொடுத்து Enter செய்ய வேண்டும். இப்பொழுது உங்களுடைய Google Pay -இல் 2 Bank Account ஓபன் ஆகிவிடும்.
ஸ்டேப் -6
நீங்கள் ஒரு Account -ல் மட்டும் பணம் ஏறவேண்டும் என்று நினைத்தால், அந்த Bank Account -யை கிளிக் செய்து அதில் இருக்கும் Set As Primary Account என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்படி செய்தால் நீங்கள் Primary ஆக Set செய்த அக்கவுண்டிற்கு மட்டும் பணம் ஏறும். அதனால் நீங்கள் ஒரு Account -யை Primary ஆக பயன்படுத்தி கொள்ளலாம்.எந்தவித ஆப்பும் ஏற்றாமல் G pay -யில் Transaction History -யை ஈசியாக Delete செய்வது எப்படி..? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |