24 மணி நேரம் ஏசி ஓடுவதால் கரண்ட் பில் அதிகரிப்பா?

AC Current Save Tips in Tamil

ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியாக சூப்பர் டிப்ஸ் | AC Current Save Tips in Tamil

How to Save Electricity with Air Conditioner: ஒவ்வொரு வருடமும் கோடைக் காலம் ஆரம்பித்தவுடன், இந்த வருடம் கோடை வெப்பம் நம்மை எப்படி வாட்ட போகிறது என்று பலருடைய மனதிலும் இது கேள்வியாக எழும். கோடைக் காலம் வருவதற்கு முன்பே எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் ஏர் கூலர், ஏசி, கூலர் பேன் மற்றும் டேபிள் பேன் போன்ற பொருள்களுக்குதள்ளுபடி அறிவிப்பார்கள். இதனால் பலரும் புதிதாகக் குளிரூட்டும் சாதனங்களை கோடை காலத்தில் வாங்க நினைப்பார்கள். குறிப்பாக ஏசி வாங்குவதற்கு முன்பு சில முக்கிய விஷயங்களைக் கவனித்து நீங்கள் புது ஏசி வாங்கினால், உங்களுடைய மாத கரண்ட் பில்லை எப்படி குறைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

newஉங்க வீட்டு கரண்ட் பில்லை குறைக்க சூப்பர் TRICKS..!

ட்ரிக்ஸ் 1:

AC Current Save Tips in Tamilஅனைத்து AC-க்கும் ஸ்டெப்லைசர் கட்டாயமாக இருக்கும். அந்த ஸ்டெப்லைரை ஆன் செய்யவும், நிறுத்தவும் தனியாக ஒரு ட்ரிப்பர் இருக்கும். ஏசியை பயன்படுத்திய பிறகு மறக்காமல்  அந்த ட்ரிப்பரால் நிறுத்தவும். ஏனென்றால் ட்ரிப்பர் ஆன் ஆகி இருக்கும் போது ஏசிக்கு எப்போதும் சிறிதளவு மின்சாரமானது பாஸ் ஆகி கொண்டிருக்கும். அதே சமயம் ஏசி நிறுத்திய நிலையில் இருக்கிறது ஆனால் ட்ரிப்பர் ஆனில் இருக்கும் சமயத்தில் வீட்டில் ஏதாவது ஷார்ட் சர்க்யூட் நிகழ்ந்தால் அதனால் ஏசி நிச்சயம் பாதிக்கப்படும். அதனால் ஏசியை பயன்படுத்தாத சமயத்தில் ட்ரிப்பர் ஆஃப்பில் இருப்பது அவசியமான ஒன்று.

ட்ரிக்ஸ் 2:

AC Current Save Tips in Tamilசிலர் எப்போதும் குளிர்ச்சியான நிலையில் இருக்க விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்கள் இரவில் ஏசியை அதிக அளவில் வைத்துவிட்டு போர்த்திக்கொண்டு தூங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இது மாதிரி தூங்குவதால் நம்முடைய உடல் ஆரோக்கியமும் கெடும். அதுமட்டுமல்லாமல் கரண்ட் பில்லும் அதிகமாகிவிடும். ஏசியில் ஒவ்வொரு டிகிரி டெம்ப்பரேச்சர் (Temperature) குறைக்கும் போதும் 6% கரண்ட் அதிகம் ஆகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணத்திற்கு ஏசியை 18-ல் வைத்து தூங்குவோர் 24-ல் வைத்து தூங்கினால் 6*4 = 24% மின்சாரம் மிச்சமாகும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ட்ரிக்ஸ் 3:

How to Save Electricity with Air Conditionerசிலருடைய வீட்டில் ஏசியை 18-ல் வைத்தால் தான் அவர்கள் இருக்கும் ரூம் குளிர்ச்சியாக இருப்பது போன்று இருக்கும். இதற்கு காரணம் ஏசியில் அதிகமாக தூசி படிந்திருப்பதுதான்.  இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது ஏசியில் இருக்கக்கூடிய பில்டரை சுத்தப்படுத்தி வைப்பது மிகவும் முக்கியம். சுத்தம் செய்வதற்கு அதிக நேரம் ஆகாது. ஏசியில் உள்ள பில்டரை சுத்தம் செய்வதன் மூலம் கரண்ட் பில்லை அதிகமாக சேமிக்க முடியும். முக்கியமாக வருடத்திற்கு ஒரு முறையாவது ஏசியை சர்வீஸ் செய்ய கொடுக்க வேண்டும்.

TNEB Digital Meter Reading பார்ப்பது எப்படி? தெரிஞ்சிக்கலாம் வாங்க

ட்ரிக்ஸ் 4:

How to Save Electricity with Air Conditioner

குளிர்காலத்தில் ஏசியை உபயோகப்படுத்தும் போது சிலருக்கு நடு இரவில் அதிகமாக குளிர்வதை உணர்வார்கள். ஆகையால் குளிர் கால நேரத்தில் நள்ளிரவில் 2 மணிக்கு மேல் ஏசி தானாகவே ஆஃப் ஆவது போல டைமர் செட் செய்து விடவும். இதன் மூலம் கரண்ட் பில்லை சுலபமாக குறைக்கலாம்.

ட்ரிக்ஸ் 5:

 AC Current Save Tips in Tamilபலர் இரவில் ஏசியை போடுவது மட்டும்மல்லாமல் ஃபேனும் (Fan) போட்டுகொண்டு தூங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இதனால் கரண்ட் பில் கண்டிப்பாக  அதிகரிக்கும். 9 ஃபேன் ஓடுவது ஒரு ஏசி ஓடுவதற்கு சமம் என்று ஆய்வுகள் கூறுகிறது. இது போன்றவர்கள் ஏசியை ஸ்விங் மோடில் இருந்து மாற்றி தங்களுக்கு தேவையான திசையில் வைத்துக்கொண்டு ஒரு அரைமணி நேரம் இருந்து பாருங்கள். நிச்சயம் ஃபேன் பயன்படாது. அதோடு இதன் மூலம் 9-ல் ஒரு பங்கு கரண்ட் பில்லையும் சேமிக்க முடியும்.

ட்ரிக்ஸ் 6:

 AC Current Save Tips in Tamilஏசி உபயோகப்படுத்தும் அறையில் பொதுவாக காற்று வெளியில் அதிக அளவில் செல்லும் அளவிற்கு இடைவெளி இருக்க கூடாது. ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டு, கதவின் அடியில் இருக்கும் சந்துகள் அடைக்கப்படுவதன் மூலமும் மின்சாரத்தை சேமிக்க முடியும். ஏசியின் மூலம் மின்சாரத்தினை சேமிக்க நினைப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil