இந்த Settings-யை மட்டும் மாத்திடுங்க..! Ads தொல்லையே இருக்காது..!

How to Stop Mobile Ads

How to Stop Mobile Ads

நீங்கள் ஆண்ட்ராய்டு போன் வைத்திருந்தால் கண்டிப்பாக விளம்பரங்கள் வரும். விளம்பரமானது ஓரளவிற்கு வந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் சிலருடைய போனில் எந்த ஆப்பை ஓபன் செய்தாலும் விளம்பரங்கள் வரும். எடுத்துக்காட்டிற்கு அமேசானில் எந்த PRODUCT பார்த்து விட்டு வந்திருப்பார்கள். நீங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை பயன்படுத்தும் போது நீங்கள் தேடிய PRODUCT விளம்பரமாக வரும். இதனை எப்படி நிறுத்துவது என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Google Ads Stop Settings:

Google Ads Stop Settings

போனில் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் Google என்பதை கிளிக் செய்யவும்.

Google Ads Stop Settings

பின் அதில் Opt Out OF Ads Personalisation  என்பதை On செய்யவும்.

இதை ஆனில் வைப்பதால் நீங்கள் அமேசான் போன்ற ஆப்களில் Product தேடியிருந்தால் அந்த Product சோசியல் மீடியா ஆப்களில் வராது.

இதையும் படியுங்கள் ⇒ தேவையில்லாமல் மெயில் வந்து கொண்டே இருக்கிறதா..? அதை நிறுத்துவதற்கு இப்படி பண்ணுங்க..!

Google Maps Ads Remove:

Settings என்ற ஆப்ஷனுக்கு சென்று Location என்பதை கிளிக் செய்யவும்.

Google Maps Ads Remove

பின் அதில் WIFI, Bluetooth Scaning இரண்டையும் Off செய்ய வேண்டும்.

அடுத்து அதிலே Google Location History என்பதையும் off செய்ய வேண்டும். நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை கூகுள் கண்காணித்து கொண்டிருக்கும். அதோடு அதற்கு சம்மந்தப்பட்ட Ads வந்து கொண்டிருக்கும். இதெல்லாம் Off -யில் வைப்பதால் தேவையில்லாமல் Ads வராது.

Youtube ads Stop:

Youtube ads Stop

நீங்கள் You Tube-யில் எந்த வீடியோ பார்த்தாலும் அதில் விளம்பரம் வரும். அதனை தடுப்பதற்கு You Tube வீடியோ ஓபன் செய்ததும் கீழே i என்ற Symbol -யை கிளிக் செய்ய வேண்டும்.

பின் அதில் Stopping Seeying This Ads என்பதை கிளிக் செய்து Yes என்று கொடுத்தவுடன் மூன்று ஆப்ஷன் வரும். அதில் Repetitive என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Send என்பதை கொடுக்கவும். இது போல் கொடுப்பதால் You Tube -யில் Ads வராது.

இதையும் படியுங்கள் ⇒ வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News