Incoming Call Settings in Tamil
இன்றைய நிலையில் நாம் அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறோம். அதேபோல ஸ்மார்ட் போனின் பயன்பாடும் அதிகரித்து செல்கிறது. நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் பல வகையான ஆப்களும் எத்தனையோ Settings -ம் இருக்கின்றன. அதுபோல நாம் தினமும் இந்த பதிவின் மூலம் போனில் இருக்கும் Settings பற்றி தெரிந்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவை தெளிவாக படித்து அந்த Settings பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Incoming Call Receive Settings in Tamil:
Settings -1
முதலில் உங்களுடைய போனில் இருக்கும் Dial Pad -யை ஓபன் செய்து உள்ளே செல்லுங்கள். அதன் மேல் 3 புள்ளிகள் போன்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
பின் 3 ஆப்சன் தோன்றும். அதில் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் Call Recordings என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். அங்கு Record Call Automatically என்ற ஆப்சன் இருக்கும்.
அதில் All Numbers மற்றும் Selected Numbers என்று 2 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும்.
நீங்கள் All Numbers என்பதை On செய்தால் உங்கள் போனில் நீங்கள் பேசும் போன் கால்கள் அனைத்தும் Record ஆகும்.
அதுவே Selected Numbers என்பதை கிளிக் செய்தால் 3 ஆப்சன் இருக்கும். அதில் Custom List என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்தவர்களின் போன் நம்பர்களை தேர்தெடுத்து அவர்களின் Call -களை மட்டும் Record செய்து கொள்ளலாம்.
மேலும் Unknown Numbers என்ற ஆப்ஷனை ON செய்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் போனில் புதிதாக ஏதும் Call வந்தால் அது Record ஆகாது.
Smart Phone-ல் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சூப்பரான Tricks..! |
Settings -2
உங்கள் போனில் Dial Pad -ல் இருக்கும் 3 புள்ளிகள் போன்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் இருக்கும் Settings என்ற ஆப்சன்குள் செல்லுங்கள்.
அதில் Auto Answer என்ற ஆப்சன் இருக்கும் அதை ON செய்து கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு வரும் போன் Calls எல்லாம் தானாகவே ON ஆகிவிடும்.
அதுபோல அதன் கீழ் Headset மற்றும் Bluetooth என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்து எத்தனை Seconds குள் போன் கால் Attend ஆகவேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இதனால் நீங்கள் பைக்கில் செல்லும் போதோ அல்லது Headset பயன்படுத்தி கொண்டு இருக்கும் போதோ வரும் போன் கால்கள் நீங்கள் தேர்வு செய்த Seconds-குள் தானாகவே Attend ஆகிவிடும்.
Incoming Call -ல இவ்வளவு Tricks இருக்கா..? இது தெரியாம போச்சே..! |
உங்க போன் Display -ல இருக்கும் Tricks பற்றி உங்களுக்கு தெரியுமா..? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |