Mobile Data Settings in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்று இந்த பதிவின் மூலம் உங்கள் மொபைல் போன் Data -வில் இருக்கும் சில Tricks பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இன்றைய நிலையில் எல்லாரிடமும் மொபைல் போன் கட்டாயம் இருக்கும். இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதுபோல ஸ்மார்ட் போனின் பயன்பாடு முன்னேறி கொண்டே செல்கிறது. அதேபோல் ஸ்மார்ட் போனில் சில சிறப்பம்சங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் மொபைல் போன் Data -வில் இருக்கும் Settings பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..!
Google Chrome Setting -ல் மாற்ற வேண்டிய விஷயங்கள் என்ன..? |
Mobile Data Tricks in Tamil:
Tricks -1
முதலில் உங்களுடைய மொபைலில் Data என்ற ஆப்ஷனை Long Press செய்யுங்கள்.
பின் அதில் கீழே Mobile Data Only Apps என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ON செய்யுங்கள். பிறகு அதில் உங்கள் போனில் இருக்கும் ஆப்ஸ் எல்லாம் இருக்கும்.
அதில் உங்களுடைய முக்கியமான Photos, Videos மற்றும் சில Files இருக்கும் ஆப்களை மட்டும் ON செய்து கொள்ளுங்கள்.
இப்படி செய்வதால் உங்கள் போனை நீங்கள் WiFi உடன் Connect செய்யும் போது இந்த Apps எல்லாம் WiFi உடன் Connect ஆகாமல் இருக்கும். இதனால் உங்கள் போனில் இருக்கும் தகவல்களை மற்றவர்கள் திருட முடியாது.Incoming Call -ல இவ்வளவு Tricks இருக்கா..? இது தெரியாம போச்சே..! |
Tricks -2
உங்களுடைய போனில் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். பின் அதில் Lock Screen என்பதை கிளிக் செய்யுங்கள்.
பின் அதில் Secure Lock Settings என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். பிறகு அதில் Lock Network And Security என்ற ஆப்ஷனை ON செய்யுங்கள்.
இப்படி செய்வதால் உங்கள் போன் Lock செய்யப்பட்டிருக்கும் போது Mobile Data -வை ON செய்யவோ அல்லது OFF செய்யவோ முடியாது. அதாவது, உங்கள் போனை நீங்கள் தொலைத்துவிட்டீர்கள் என்றால், அந்த நேரத்தில் உங்கள் போன் Data -வை OFF செய்ய முடியாது. இதனால் உங்கள் போன் இருக்கும் இடத்தை சுலபமாக கண்டுபிடித்து விட முடியும்.Tricks -3
உங்கள் போனில் Data என்ற ஆப்ஷனை Long Press செய்து, பின் அதில் Restrict Data Usage என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
பிறகு அதில் உங்கள் போனில் இருக்கும் Apps எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு எந்த ஆப்களுக்கு Data தேவையில்லையோ அதை மட்டும் Untick (×) செய்யுங்கள்.
இப்படி செய்வதன் மூலம் நீங்கள் Data -வை பயன்படுத்தும் போது Untick செய்த ஆப்களால் டேட்டாவை எடுத்து கொள்ள முடியாது.
உங்க போன் Display -ல இருக்கும் Tricks பற்றி உங்களுக்கு தெரியுமா..? |
Instagram பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |