Mobile Phone Storage Settings in Tamil
இனிமையான நேயர்களுக்கு அன்பு வணக்கங்கள்..! இன்றைய பதிவு பார்ப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் தன்னுடைய போன் Storage எப்பொழுதும் Full ஆகவே இருக்கிறது என்று தான் கவலைபடுகிறார்கள். ஏதாவது ஒரு போட்டோ அல்லது வீடியோ டவுன்லோட் செய்தால் கூட போன் Storage Full ஆகிவிடுகிறது என்று கவலைப்படுபவர்களா நீங்கள்..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே இன்று இந்த பதிவின் மூலம் போன் Storage Full ஆவதை தடுப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்..!
எப்பொழுதும் உங்கள் Mobile டேட்டாவை On -யில் வைத்திருக்கிறீர்களா..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..! |
Phone Storage Full Problem Solution in Tamil:
ஸ்மார்ட் போனில் இருக்கும் App -கள் நமக்கே தெரியாமல் போனில் சில டேட்டாவை Store செய்து வைத்திருக்கும். இதனாலும் போன் Storage Full ஆகலாம். நாம் இது தெரியாமல் போட்டோ மற்றும் வீடியோ போன்றவற்றால் தான் போன் Storage Full ஆகிறது என்று நினைத்து கொண்டு அதை மொத்தமாக Delete செய்து விடுகிறோம்.
ஆனால் இனி அப்படி செய்ய தேவையில்லை. போட்டோ வீடியோவை Delete செய்யாமலேயே உங்கள் போன் Storage -யை குறைக்க முடியும். அந்த Tricks பற்றி பார்க்கலாம் வாங்க.
Solution -1
முதலில் உங்களுடைய போனில் இருக்கும் ஏதாவது ஒரு ஆப்பை Long press செய்யுங்கள்.
உதாரணமாக YouTube -ஐ Long press செய்து கொள்ளுங்கள். அதில் App Info என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
பின் ஒரு திரை தோன்றும். அதில் Storage என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் Clear Data என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் போனில் YouTube ஆப் மூலம் சேர்ந்த Storage அனைத்தும் Clear ஆகிவிடும்.
இதுபோல ஒவ்வொரு ஆப்பையும் Long press செய்து அதன் Storage அனைத்தையும் Clear செய்து கொள்ளுங்கள். இதுபோல செய்வதால் உங்கள் போன் Storage Full ஆகாமல் இருக்கும்.
Youtube Settings -ல இவ்வளவு விஷயம் இருக்கா..? |
உங்க போன் Play Store App -ல இந்த Settings எல்லாம் உடனே மாத்திடுங்க..! |
Solution -2
அடுத்து உங்களுடைய போனில் File Manager -க்கு செல்லுங்கள். அதில் Internal Storage என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
பின் அதில் கீழே சென்றால் Whatsapp என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதில் 3 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும்.
அந்த ஆப்ஷனில் Database என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் இதுவரை உங்கள் Whatsapp -ல் வந்த போட்டோஸ் , வீடியோஸ் மற்றும் மற்ற தகவல்கள் எல்லாம் Backup ஆக மாறி இருக்கும் அதை நீங்கள் Delete செய்ய வேண்டும்.இப்படி செய்வதால் உங்கள் போன் Storage Full ஆவதை தடுக்க முடியும். அதுபோல உங்கள் போன் Storage -யும் குறைக்க முடியும்.
Solution -3
அதுபோல உங்கள் போன் File Manager சென்று அதில் Internal Storage என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் Freeup Space என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதை Clear செய்ய வேண்டும்.
இதுபோல போல வாரத்திற்கு ஒரு முறை செய்து வருவதால் உங்கள் போன் Storage Full ஆகாமல் இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Truecaller-ல இவ்வளவு Tricks இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |